மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு பின்னங்கழுத்தில் சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்றிரவு டெல்லியில் இருந்து குஜராத்திற்கு வந்தார். அகமதாபாத்தில் தனது வீட்டில் தங்கிய அவர் இன்று(செப்.4) காலை குசும் தீரஜ்லால் மருத்துவமனைக்கு சென்றார். அவர் வழக்கமான உடல் பரிசோதனைக்கு சென்றிருப்பதாக தகவல் வெளியானது.
இதன்பின், பாஜக மத்திய குழு ஒரு அறிக்கை வெளியிட்டது, அதில், அமித்ஷாவுக்கு பின்னங்கழுத்தில் ஒரு சிறிய கட்டி இருந்ததாகவும், அதை அறுவை சிகிச்சை செய்து நீக்கியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும், அமித்ஷா சிகிச்சைக்கு பின்னர் மதியம் 12.30 மணியளவில் வீடு திரும்பினார். நாளை அவர் மீண்டும் டெல்லிக்கு செல்கிறார்.