தீபாவளிக்கு முன்னாடியே சங்கத்தமிழன் ரிலீஸ்! பிகிலுடன் போட்டியில்லையா?

by Mari S, Sep 4, 2019, 18:50 PM IST

விஜய்சேதுபதியின் சங்கத்தமிழன் திரைப்படம் தீபாவளிக்கு முன்பாகவே வெளியாகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

விஜய்சந்தர் இயக்கத்தில், விஜய்சேதுபதி, ராஷிகண்ணா நடிப்பில் உருவாகியுள்ள சங்கத்தமிழன் படம், தீபாவளிக்கு வெளியாகும் என்று சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.

விஜய்யின் பிகில் படம் மற்றும் கார்த்தியின் கைதி படங்களும் தீபாவளிக்கு வெளியாவதால், பலத்த போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், சினிமா விமர்சகர் ஸ்ரீதர் பிள்ளை, தனது ட்விட்டர் பக்கத்தில், படத்தின் டப்பிங் பணிகளை அதிவிரைவாக விஜய்சேதுபதி முடித்துவிட்டதாகவும், ஆடியோ வெளியீட்டு விழா விரைவாக நடத்தப்பட்டு, படமும் அக்டோபர் 4ம் தேதி வெளியாகும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதன்மூலம் படம், தீபாவளிக்கு முன்பே வெளியாகும் என நம்பப்படுகிறது. கடந்த ஆண்டும் தீபாவளி ரேசில் சர்கார், விஸ்வாசம், என்.ஜி.கே மோதும் என எதிர்பார்க்கப்பட்டு, இறுதியில் விஜய்யின் சர்கார் மட்டுமே தீபாவளிக்கு வெளியானது குறிப்பிடத்தக்கது.


Leave a reply