வரலாற்றில் கருப்பு நாள்: சந்திரபாபு நாயுடு பேட்டி

ஆந்திராவில் ஜெகன் அரசைக் கண்டித்து குண்டூருக்கு போராட்டம் நடத்தச் செல்லவிருந்த சந்திரபாபு நாயுடு தடுக்கப்பட்டு, வீட்டில் சிறை வைக்கப்பட்டார். அப்போது நாயுடு கூறுகையில், ஆந்திர வரலாற்றில் இது கருப்பு நாள் என்றார்.

நாடாளுமன்றத் தேர்தலுடன் ஆந்திராவில் சட்டமன்றத் தேர்தலும் நடைபெற்றது. இதில், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. அக்கட்சித் தலைவர் ஜெகன்மோகன் முதல்வராக பொறுப்பேற்றார்.

இதைத் தொடர்ந்து, தெலுங்குதேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்த போது, ரூ.8 கோடியில் கட்டியிருந்த அரசு பங்களாவை விதிமீறல் கட்டடம் என்று கூறி ஜெகன் அரசு இடித்தது. தெலுங்குதேசம் கட்சியினர் மீது தாக்குதல்கள் நடந்தன. ஏற்கனவே அந்த கட்சியினர் ஆட்சியில் இருந்த போது நடத்திய அராஜகங்களுக்கு பதிலடி என்று சொல்லியே ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் இந்த தாக்குதலை நடத்துகின்றனர்.

இந்நிலையில், பல்னாடு மாகாணத்தில் அட்மாக்கூர் கிராமத்தைச் சேர்ந்த தெலுங்கு தேசம் கட்சியினர் பலர், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினரின் தாக்குதலுக்குப் பயந்து வெளியேறினர். இப்படி ஆளும்கட்சியினருக்கு பயந்து வெளியேறிய தொண்டர்களுக்காக அமராவதியில் அடைக்கலம் கொடுப்பதற்காக மறுவாழ்வு மையத்தை தெலுங்குதேசம் கட்சி தலைமை ஏற்பாடு செய்துள்ளது. இங்கு 127 குடும்பங்கள் அடைக்கலமாகி தங்கியுள்ளனர்.

இந்த சூழலில், தெலுங்குதேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, சலோ பலநாடு என்ற பெயரில், குண்டூரில் இருந்து அட்மாக்கூர் வரை பிரம்மாண்டமான பேரணியை இன்று நடத்தப் போவதாக அறிவித்திருந்தார். இந்த பேரணிக்கு போலீஸ் தடை விதித்தது. மேலும், விஜயவாடா எம்பி கேசினேனி நானி உள்பட தெலுங்குதேசம் கட்சி எம்பிக்கள், எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் அமைச்சர்களை முன்னெச்சரிக்கையாக கைது செய்தனர்.
சந்திரபாபு நாயுடு, அவரது மகன் லோகேஷ் ஆகியோர் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் போலீசார் தடுத்தனர். அவர்களை வீட்டுச்சிறையில் வைத்தனர். அப்போது சந்திரபாபு நாயுடு கூறுகையில், இது ஆந்திர வரலாற்றில் கருப்பு தினம். அட்மாக்கூைர விட்டு வெளிேயறி வந்த மக்களுக்கு நாங்கள் ஆதரவாக உள்ளோம் என்று காட்டுவதற்காக இந்த பேரணிைய நடத்துகிேறாம். அந்த தொண்டர்களை மீண்டும் அவர்களின் சொந்த ஊருக்கு அழைத்து செல்வதில் என்ன தவறு? ஜனநாயக ரீதியான இந்த பேரணி எப்படி சட்டம்ஒழுங்கை கெடுக்கும் என்று எனக்கு புரியவில்லை என்றார்.

இதற்கிடையே, குண்டூர், பல்னாடு மாவட்டங்களில் ஏற்கனவே 144 தடையுத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும், அங்கு பேரணி நடத்தக் கூடாது என்றும் மாநில டிஜபி கவுதம் சவாங் தெரிவித்தார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
election-commission-of-india-announced-that-nankuneri-vikiravandi-by-election-will-be-held-on-oct-21
நாங்குனேரி, விக்கிரவாண்டியில் அக்.21ம் தேதி இடைத்தேர்தல்.. சுனில் அரோரா அறிவிப்பு..
election-commission-announced-maharashtra-haryana-poll-dates
மகாராஷ்டிரா, அரியானாவில் அக்.21ல் சட்டமன்றத் தேர்தல்.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு
election-commission-of-india-to-announce-dates-for-maharashtra-and-haryana-assembly-elections-at-noon-today
நாங்குனேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் எப்போது? இன்று அறிவிப்பு வெளியாகிறது
tdp-chief-chandrababu-naidu-demands-cbi-inquiry-into-the-alleged-suicide-of-former-speaker
முன்னாள் சபாநாயகர் தற்கொலை.. சிபிஐ விசாரிக்க நாயுடு கோரிக்கை..
mayawati-loses-all-6-mlas-in-rajasthan-big-gain-for-congress
ராஜஸ்தானில் திடீர் திருப்பம்.. 6 பகுஜன் எம்.எல்.ஏக்கள் காங்கிரஸ் கட்சிக்கு தாவல்..
pm-narendra-modi-turns-69-today-sonia-mamada-banerji-wished-him
பிரதமர் மோடிக்கு பிறந்த நாள்.. சோனியா, மம்தா வாழ்த்து..
rahul-gandhis-tweet-on-row-over-hindi-tags-23-indian-flag-emojis
பல மொழிகள் இருப்பது இந்தியாவின் பலவீனமா? ராகுல்காந்தி ட்விட்...
dmdk-urged-the-tamilnadu-government-to-conduct-local-body-elections-immediately
உள்ளாட்சித் தேர்தலை உடனே நடத்த வேண்டும்.. தேமுதிக வலியுறுத்தல்
kashmir-has-been-made-as-a-prison-vaiko-said
பரூக் அப்துல்லாவை நேரில் சந்திப்பேன்.. வைகோ பேட்டி
ex-j-and-k-chief-minister-farooq-abdullah-detained-under-public-safety-law
பொது பாதுகாப்பு சட்டத்தில் பரூக் அப்துல்லாவுக்கு சிறை.. சுப்ரீம் கோர்ட்டில் தகவல்
Tag Clouds