மனித உரிமையை காப்பாற்ற வேண்டும் - அன்புமணி ராமதாஸ் அறிக்கை..!

Human rights must be protected - Anbumani Ramadoss statement ..!

by Loganathan, Sep 7, 2020, 14:13 PM IST

செப்டம்பர் 7 ஆம் நாள், 'நீல வானுக்கான தூயக்காற்று பன்னாட்டு நாள்' (International Day of Clean Air for blue skies) ஆகும். 19.12.2019-ல் ஐநா பொதுச்சபை நிறைவேற்றிய தீர்மானத்தின் அடிப்படையில் இவ்வாண்டு முதல் இந்த நாள் உலகெங்கும் கடைபிடிக்கப்படுகிறது.

இதனை முன்னிட்டு மாநிலங்கள் அவை உறுப்பினரும் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணி தலைவர் திரு. இரா.அண்புமணி ராமதாஸ் அவர்கள் அது சார்ந்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் கூறியிருப்பது காற்று மாசுபாட்டினால் உலகில் ஆண்டுக்கு 70 லட்சம் பேர் இறந்து போகின்றனர். இந்தியாவில் 12 லட்சம் பேர் காற்று மாசுபாட்டினால் சாகிறார்கள். இந்தியர்களின் மரணத்துக்கு மூன்றாவது பெரிய காரணம் காற்று மாசுபாடுதான். இந்தியாவில் 8 இறப்புகளில் ஒன்றிற்கு காற்று மாசுபாடு காரணமாக உள்ளது. ஆஸ்துமா, நுரையீரல் நோய்கள், நுரையீரல் புற்றுநோய், பக்கவாதம், உயர் இரத்த அழுத்தம், இருதய நோய் உள்ளிட்ட பல நோய்களை காற்று மாசுபாடு உருவாக்குகிறது. 43 விழுக்காடு நுரையீரல் நோய்களுக்கும், 27 விழுக்காடு நுரையீரல் 24 விழுக்காடு பக்கவாத பாதிப்புக்கும், 25 விழுக்காடு இருதய நோய் பாதிப்புக்கும் காற்று மாசுபாடு காரணம்.

இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் வாழும் குழந்தைகளின் வாழ்நாளில் இரண்டரை ஆண்டுகள் காற்று மாசுபாட்டால் குறைகிறது என உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. சென்னையில் வாழும் எல்லா மக்களையும் காற்று மாசுபாடு பாதித்துள்ளது. குறிப்பாக, காற்று மாசுபாட்டினால் குழந்தைகள் மிக மோசமாக பாதிக்கப்படுகின்றனர்.

ஒரு கன மீட்டர் காற்றில் PM 2.5 நுண் துகள் மாசு 10 மைக்ரோகிராம் அளவுக்குள் இருக்க வேண்டும். எனினும் இந்தியாவில் இதனை முதல் கட்டமாக 35 எனும் அளவுக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. இந்திய அரசு 40 மைக்ரோகிராம் என்பதை உச்ச அளவாக அறிவித்துள்ளது. ஆனால், கடந்த ஆண்டில் சென்னை நகரில் PM 2.5 நுண் துகள் மாசு 300 அளவை கடந்து 450 எனும் அளவை எட்டியது.

கொரோனா ஊரடங்கிற்கு முன்பு, சென்னையில் ஆண்டுக்கு 100 நாட்கள் நச்சுக்காற்றை சுவாசிக்கும் நிலையில் மக்கள் வாழ்ந்தனர். சென்னை நகரின் காற்று மாசு அளவு, மணலி காற்று மாசு கண்காணிப்பு கருவி பதிவுகள் படி, கடந்த நவம்பர் 5 வரையிலான 365 நாட்களில் 119 நாட்கள் அனுமதிக்கப்பட்டதை விட கூடுதலாக இருந்துள்ளது. பொது அமைப்புகள் சென்னையின் 15 இடங்களில் மேற்கொண்ட ஆய்வில் அனைத்து இடங்களிலுமே 70 மைக்ரோ கிராம் அளவுக்கு மேல் 187 மைக்ரோ கிராம் வரை இருந்தது கண்டறியப்பட்டது. மொத்ததில் சென்னை நகரில் மக்கள் சுவாசிக்கும் காற்று பல நாட்களில் அபாய நிலையில் இருந்தது தெளிவான உண்மை ஆகும்.

கொரோனா ஊரடங்கின் காரணமாக சென்னை உள்ளிட்ட நகரங்களில் காற்று மாசு கணிசமாக குறைந்திருந்தன. ஆனால், இதற்காக மக்கள் கொடுத்துள்ள விலை மிக அதிகம். மிகப்பெரிய அளவில் பொருளாதர இழப்புகளை சந்தித்துதான் இந்த நிலையை எட்டியுள்ளோம். இது வரவேற்க தக்க மாற்றம் இல்லை. மாறாக , பொருளாதார இழப்புகள் இல்லாமலேயே தூயக் காற்றை உருவாக்க முடியும். அதற்கான வழிமுறைகளும் தொழில்நுட்பங்களும் உள்ளன.

கொரோனா தொற்றினை கட்டுப்படுத்தும் நோக்கில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் விலக்கப்பட்டுள்ள நிலையில், காற்று மாசுபாடு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில், சென்னையில் காற்றுமாசுமாட்டை தடுக்க திட்டமிட்ட செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். சென்னை மக்களுக்கு தூய சுவாசக்காற்றை அளிப்பதன் மூலம் சுமார் ஒரு கோடி மக்களின் எதிர்காலத்தை காப்பாற்ற முடியும். மேலும், புவிவெப்படைவதற்கு காரணமான பசுங்குடில் வாயுக்களை குறைக்கவும் முடியும்.

தமிழ்நாடு அரசு இனியும் தாமதிக்காமல் சென்னை மாநகரின் காற்று மாசுபாட்டை போர்க்கால அடிப்படையில் கட்டுப்படுத்த வேண்டும். இந்திய அரசு 10.01.2019 ஆம் நாள் தேசிய தூய காற்று திட்டத்தை (National Clean Air Programme) வெளியிட்டது.ஆனால், சென்னை மாநகரம் அத்திட்டத்தில் இல்லை. மத்திய அரசின் உதவிக்காக காத்திருக்காமல் - தமிழ்நாடு அரசே சென்னை பெருநகருக்கான தூய காற்று செயல்திட்டத்தை (Chennai Clean Air Action Plan) உடனடியாக உருவாக்கி, அதனை போர்க்கால அடிப்படையில் செயல்படுத்தி சென்னை மாநகர மக்களின் தூயக்காற்றுகான அடிப்படை மனித உரிமையை காப்பாற்ற வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

என்பதாகும் எனவே சென்னை பெரு நகர மக்கள் தான் இனி சுதாரித்துக் கொள்ள வேண்டும்.

You'r reading மனித உரிமையை காப்பாற்ற வேண்டும் - அன்புமணி ராமதாஸ் அறிக்கை..! Originally posted on The Subeditor Tamil

More Politics News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை