பிரபல நடிகர் பேட்மிட்டன் வீராங்கனையுடன் திடீர் நிச்சயதார்த்தம்.. மோதிரம் அணிவித்து உறுதி செய்தார்..

by Chandru, Sep 7, 2020, 15:30 PM IST

வெண்ணிலா கபடி குழு படத்தில் ஹீரோவாக அறிமுகமாகி அடுத்தடுத்து பலே பாண்டியா, துரோகி, குள்ளநரி கூட்டம், நீர்ப் பறவை போன்ற படங்களில் நடித்தார் விஷ்ணு விஷால். இவர் நடித்த ராட்சசன் படம் சூப்பர் ஹிட்டாக அமைந்தது. அதன் பிறகு இவர் கோலிவுட்டில் இயக்குனர்களால் கவனிக்கபடும் நடிகர்களில் ஒருவராக மாறி இருக்கிறார்.விஷ்ணு விஷாலுக்கு கடந்த 2010ம் ஆண்டு ரஜினி நடராஜ் என்பவரை மணந்தார். இவர்களுக்கு ஆரியன் என்ற மகன் பிறந்தார். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து சட்டப்படி விவாகரத்து பெற்றுப் பிரிந்தனர். பின்னர் நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார் விஷ்ணு விஷால்.

இந்நிலையில் விஷ்ணு விஷாலுக்கும் பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவுக்கும் காதல் மலர்ந்தது. அடிக்கடி இருவரும் ஜோடியாக இருக்கும் படங்களை நெட்டில் பகிர்ந்து வந்தாலும் தாங்கள் காதலிப்பதை ஒப்புக்கொள்ளாமல் காலம் தாழ்த்தி வந்தனர். கடந்த ஜனவரி 1-ம் தேதி இருவரும் காதலை உறுதி செய்தனர்.இன்று (செப்டம்பர் 7) ஜுவாலா கட்டாவின் பிறந்தநாளை முன்னிட்டு இருவரும் மோதிரம் மாற்றிக் கொண்டு, திருமணம் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். ஜுவாலா கட்டாவுக்கு மோதிரம் அணிவித்த புகைப்படங்களை விஷ்ணு விஷால் தனது டிவிட்டரில் பகிர்ந்துள்ளார் .

இதுகுறித்து விஷ்ணு கூறியிருப்பதாவது: ஜூவாலா கட்டாவுக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்கள். புதிய வாழ்க்கையைத் தொடங்குவோம். வேலையில் பாசிடிவ் எண்ணத்துடன் இருப்போம். நல்ல எதிர்காலத்தை நமக்கும், ஆர்யன் மற்றும் குடும்பத்தினர், நண்பர்கள் சுற்றியிருப்பவர்களுக்கு உருவாக்குவோம் எனத் தெரிவித்திருக்கிறார்.விஷ்ணு விஷாலுக்கும். ஜூவாலாவுக்கும் ரசிகர்கள் வாழ்த்துக்களைப் பொழிந்து வருகின்றனர்.

READ MORE ABOUT :

More Cinema News

அதிகம் படித்தவை