ஜெ சமாதியை மூடிவிட்டால் நினைப்பது நடக்குமா என்ன? டிடிவி தினகரன் கேள்வி

Advertisement

சீப்பை ஒளித்து வைத்தால் திருமணம் நின்று விடும் என்பதுபோல ஜெயலலிதா சமாதியை மூடி இருக்கிறார்கள் . இதனாலெல்லாம் அவர்கள் நினைப்பது நடந்துவிடாது என டிடிவி தினகரன் தெரிவித்தார். மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், இம்மாதம் 7ஆம் தேதி சசிகலா சென்னைக்கு வர இருக்கிறார் அவரது வருகைக்காக தமிழக மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள். பெங்களூரில் இருந்து சென்னை வரை தொடர்ச்சியாக வரவேற்பதற்கு மக்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். பெங்களூர் சென்னை சாலை மிகவும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலை. எனவே இந்த வரவேற்பு நிகழ்ச்சியால் யாருக்கும் எந்த இடைஞ்சலும் இல்லாமல் தொண்டர்கள் நடந்து கொள்ள வேண்டும். ஜெயலலிதா சமாதி மூடப்பட்டுள்ளது பற்றிய கேள்விக்கு,ஜெயலலிதா எதற்காக தண்டிக்கப்பட்டார் என்று தெரியும்.

உண்மையான குற்றவாளி யார் என்று அனைவருக்கும் தெரியும். என்ன எந்த எண்ணத்தில் செய்கிறாரோ தெரியாது அவசர அவசரமாக நினைவிடத்தை திறந்தார்கள். இப்போது பராமரிப்பு நடப்பதாகச் சொல்லி மூடி இருக்கிறார்கள். சீப்பை ஒளித்து வைத்தால் திருமணம் நின்று விடாது. நீங்கள் மன்னிப்பு கேட்டால் கட்சியில் உங்களை சேர்த்துக் கொள்வதாக சிவி சண்முகம் தெரிவித்திருக்கிறார். என்பது குறித்த கேள்விக்கு, நான் எதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் அப்படி என்ன தவறு செய்தேன்.? யார் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதை காலம்தான் முடிவு செய்யும். தமிழ்நாட்டில் நிறைய கெமிக்கல் ரியாக்சன் உருவாகி வருகிறது. அதிமுகவை மீட்டெடுக்க தான் போராடி வருகிறோம் மக்கள் நிச்சயமாக மக்கள் நல்ல தீர்ப்பு வழங்குவார்கள். சசிகலா காரில் அதிமுக கொடியை பயன்படுத்தியதால் எழுந்த சர்ச்சை குறித்த கேள்விக்கு தூங்குபவர்களை எழுப்பலாம்.

தூங்குவது போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது.பொதுக்குழுவை கூட்டுவதற்கு பொதுச் செயலாளர் தேர்தல் நடத்துவதற்கு ம் அதிகாரம் படைத்தவர் பொதுச்செயலாளர் அவர் உயிரோடு இல்லாத காலத்தில்தான் கூட்டத்தை கூட்ட முடியாது. பொதுச்செயலாளர் செயல்படாத நிலை துணை பொதுச்செயலாளர்கள் செயல் படமுடியும். சசிகலாவுக்கு எல்லா அதிகாரம் இருக்கிறது. சசிகலா தலைமையில் தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சிடை மீண்டும் அமைப்போம். ஆட்சியை அமைக்க அதிமுகவை மீட்டெடுக்க ஒற்றுமையுடன் செயல்படுவோம். உண்மையான தொண்டர்கள், விசுவாசத்தின் பக்கம் உள்ளவர்கள் சசிகலா பக்கம்தான் இருக்கிறார்கள். அதிமுகவில் தேர்தல் நடத்தும் வரை சசிகலா தான் கட்சியின் பொதுச் செயலாளர்.

கட்சியில் தேர்தலை நடத்த அதிகாரம் படைத்தவரும் பொது செயலாளர் தான்.கட்சியில் தேர்தல் நடத்துவதற்கு அதிகாரம் படைத்தவர் சசிகலா.அதிமுக தொண்டர்களை சசிகலா வழிநடத்துவார். தேர்தலுக்கு அமமுக தயாராகி வருகிறது. துணை முதல்வர் உள்ளிட்டவர்கள் சசிகலாவை சந்திப்பதாக வெளியாகியுள்ள தகவல் பற்றிய கேள்விக்கு, இது போன்ற கேள்விக்கு பதில் சொல்ல முடியாது. அமைச்சர்கள் சசிகலாவை சிந்திப்பார்களா என்பது குறித்து அவர்களிடம் தான் கேட்க வேண்டும். அவரிடம்தான் கேட்க வேண்டும். சசிகலாவுக்கு எதிராக லட்சம் போஸ்டர்களை ஒட்டுவார்கள் என அமைச்சர் சிவி சண்முகம் பேசியிருக்கிறார் அவர் நிதானத்துடன் தான் பேசி இருக்கிறாரா என்பதை அவரிடம் கேளுங்கள். இவ்வாறு தினகரன் தெரிவித்துள்ளார்.

Advertisement
மேலும் செய்திகள்
can-nirmala-sitharaman-be-mocked-turbulent-weather-in-coimbatore
தயாநிதி மாறனின் பிராமணர்கள் மொழி.. நிர்மலா சீதாராமனை கேலி செய்யலாமா? கோவையில் கொந்தளித்த வானதி
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
m-k-stalin-his-first-action
திமுகவிற்கு குடைச்சல் கொடுத்தவர்களுக்கு ஸ்டாலின் “செக்”!
how-kadampur-raju-win-against-ttv-dinakaran
டிடிவி தினகரன் கடம்பூர் ராஜுவிடம் ஏன் தோற்றார்?!
traffic-ramasamy-died-due-to-illness
சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி மரணம்!

READ MORE ABOUT :

/body>