முதலமைச்சர் பழனிசாமிக்கு கிடைத்த ரிப்போர்ட்டால் கட்சி நிர்வாகிகளிடம் கடுமையாக நடந்து கொண்டுள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த 6 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் இருபது நாள்கள் உள்ளது. தேர்தலுக்குப் பின் ஒவ்வொரு கட்சியும் தங்களுக்கு வெற்றி வாய்ப்பு குறித்து ஆலோசித்து வருகிறது.
அதிமுக, திமுக கட்சிகள் தங்களது ஐடி விங்க் மூலம் தேர்தலுக்கு பிந்தைய நிலவரத்தை கேட்டு தெரிந்துள்ளனர்.
திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பது உறுதி என திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு ஐபேக் நிறுவன தலைவர் பிரசாந்த் கிஷோர் தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைப்பது உறுதி என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக ஐடி விங்க் தகவல் கொடுத்துள்ளது. இருப்பினும், தேர்தல் பணிகளை சரிவர செய்யாத நிர்வாகிகள், வெற்றி வாய்ப்பு பறிபோகும் தொகுதிகளின் பொறுப்பாளர்கள் பட்டியலையும் கொடுத்துள்ளது. சில அமைச்சர்கள் இந்த முறை தோல்வியை தழுவார்கள் என அதிர்ச்சி தகவலும் கூறப்பட்டுள்ளது.
இதனால் கடும் கோபமடைந்த முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சீட் கிடைக்கவில்லை என்றால் வேலை பார்க்க மாட்டீர்களா என கட்சி நிர்வாகிகளை துளைத்து எடுத்துள்ளனர்.
அதிமுக ஐடி விங்க் அக்கட்சிக்கு சாதகமாகவும், திமுக ஐடி விங்க் அக்கட்சிக்கு சாதகமாகவும் ரிப்போர்ட் கொடுத்திருந்தாலும், மே 2 ஆம் தேதி தமிழ்நாட்டில் எந்த கட்சி ஆட்சியமைக்கப்போது என்பது தெரியவரும்.