இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,68,912 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு முதல் அலையைக் காட்டிலும், இரண்டாவது அலையின் தாக்கம் அதிவேகமாக உள்ளது. இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்க அனைத்து மாநில அரசுகளும், பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதனிடையே மத்திய அரசும் பல்வேறு அறிவுரைகள் மாநில முதலமைச்சர்களுக்கு வழங்கப்படுகின்றன. இந்தியாவில் இதுவரை 10,45,28,565 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் 2 ஆம் அலையின் தாக்கம் அதிகரித்துள்ளது.
மத்திய சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி:-
- இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,68,912 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
- கொரோனாவால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,35,27,717 ஆக அதிகரித்துள்ளது.
- கொரோனா தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 904 பேர் உயிரிழந்துள்ளனர்.
- கொரோனாவல் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,70,179 ஆக அதிகரித்துள்ளது.
- கொரோனா பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 75,086 பேர் குணமடைந்துள்ளனர்.
- இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,21,56,529 ஆக உயர்ந்துள்ளது.
- கொரோனா தொற்றுக்கு 12,01,009 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனிடையே, இந்தியாவில் இதுவரை 25,78,06,986 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாகவும், நேற்று மட்டும் 11,80,136 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
உலக அளவில் கொரோனா பாதிப்பில் 3 ஆம் இடத்தில் இருந்த இந்தியா, தற்போது 2 ஆம் இடத்திற்கு சென்றுள்ளது.