பாபர் மசூதி வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிக்கு புதிய பதவி... அதுவும் எங்கு தெரியுமா?!

by Sasitharan, Apr 13, 2021, 17:27 PM IST

அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்க உள்ளது. வழக்கில் பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்டோர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது. உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி - ராமர் கோயில் நிலத்தகராறு இருநூறு ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வந்தது. நீண்ட காலமாக இருந்த பாபர் மசூதி, ராமர் பிறந்த இடம் என்று இந்து அமைப்புகள் கோரி வந்தன.

கடந்த 1992-ம்ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி பல்லாயிரக்கணக்கான கரசேவகர்கள் அங்கு குவிந்தனர். அவர்கள் பாபர் மசூதியை இடித்தனர். அப்போது பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி மற்றும் இந்து அமைப்புகளின் தலைவர்கள் நேரடியாக அங்குச் சென்றிருந்தனர்.

அப்போது மத்தியில் பிரதமர் நரசிம்மராவ் தலைமையில் காங்கிரஸ் ஆட்சியும், உ.பி.யில் முதல்வர் கல்யாண்சிங் தலைமையில் பாஜக ஆட்சியும் நடைபெற்றது. இரு ஆட்சியினரும் பாபர் மசூதி இடிக்கப்படும் வரை அதைத் தடுக்க தவறி விட்டனர். இந்நிலையில், பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அதை சிபிஐ விசாரித்தது. அவர்கள் உள்பட 49 பேர் மீது குற்றம்சாட்டி சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

பின்னர், குற்றம்சாட்டப்பட்டிருந்தவர்களில் 17 பேர் இறந்து விட்டதால், மீதி 32 பேர் மீது உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள சி.பி.ஐ. நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்தது. இந்த வழக்கில் சி.பி.ஐ. நீதிமன்ற நீதிபதி சுரேந்திர குமார் யாதவ் இறுதித் தீர்ப்பு கூறி இருந்தார். அதில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்த நீதிபதி, அடையாளம் தெரியாத சமூக விரோதிகளால் மசூதி இடிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

மேலும் தீர்ப்பு அளித்த நாளிலேயே, நீதிபதி சுரேந்திர குமார் யாதவ் தனது ஓய்வு முடிவை அறிவித்தார். இதன்பின் வெளியுலகில் அதிகம் பேசப்படாமல் இருந்த அவர், தீர்ப்பு வெளியாகி 6 மாதங்களுக்கு பின் உத்தரப்பிரதேச மாநில லோக்ஆயுக்தா நீதிமன்றத்தின் துணைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான ஆணை இன்று அம்மாநில ஆளுநர் அனந்திபென் பட்டேல் வெளியிட்டு இருக்கிறார்.

You'r reading பாபர் மசூதி வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிக்கு புதிய பதவி... அதுவும் எங்கு தெரியுமா?! Originally posted on The Subeditor Tamil

More Politics News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை