தவறை சுட்டிக்காட்டிய உதயநிதி.. மாற்ற ஒப்புக்கொண்ட கர்ணன் படக்குழு!

by Sasitharan, Apr 13, 2021, 17:38 PM IST

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், லால், ராஜிஷா விஜயன், லட்சுமி ப்ரியா, யோகி பாபு, கெளரி கிஷன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் “கர்ணன்”. தாணு தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக தேனி ஈஸ்வர், இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் பணிபுரிந்துள்ளனர். கர்ணன் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தமிழகத்தில் மட்டும் 525 திரையரங்குகளில் திரையிடப்பட்ட கர்ணன், முதல் நாள் 11 கோடி ரூபாய்க்கு மேலாகவும், இரண்டாவது நாள் ரூ.8 கோடிக்கு மேலாகவும், மூன்றாவது நாள் 11 கோடிக்கு மேலாகவும் வசூல் செய்ததாக திரையரங்கு வட்டாரத்தில் கூறுகின்றனர். இதில் தயாரிப்பாளருக்கு மட்டும் மூன்றே நாட்களில் 22 கோடி ரூபாய் பங்கு கிடைத்திருக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

படம் 1995ல் நடந்த கொடியன்குளம் கலவரத்தை மையமாக வைக்கப்பட்டு எடுக்கப்பட்ட நிலையில், படத்தில் 1997 என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இது சலசலப்பை ஏற்படுத்தியது. காரணம் 1995ல் அதிமுக ஆட்சியும், 1997ல் திமுக ஆட்சியும் நடந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து இது தொடர்பாக திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று ஒரு ட்வீட் பதிவிட்டு இருந்தார்.

அதில், ``கர்ணன் பார்த்தேன். ஒடுக்கப்பட்ட மக்களின் வலியையும், மறுக்கப்பட்ட அவர்களின் உரிமையையும் மிகைப்படுத்துதல் இன்றி எடுக்கப்பட்டுள்ள இப்படம் கொண்டாடப்பட வேண்டியது. நண்பர் தனுஷ், அண்ணன் கலைப்புலி தாணு, இயக்குநர் மாரி செல்வராஜ் மூவரிடமும் பேசி அன்பையும் வாழ்த்தையும் தெரிவித்தேன்.

1995 அதிமுக ஆட்சியில் நடந்த கொடியன்குளம் கலவரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் அச்சம்பவம் 1997ல் கழக ஆட்சியில் நடந்ததாக காட்டப்பட்டுள்ளது. இதனை தயாரிப்பாளர், இயக்குநரிடம் சுட்டிக்காட்டினேன். அந்தத் தவறை இரு தினங்களில் சரிசெய்துவிடுகிறோம் என உறுதியளித்தனர். நன்றி" என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

You'r reading தவறை சுட்டிக்காட்டிய உதயநிதி.. மாற்ற ஒப்புக்கொண்ட கர்ணன் படக்குழு! Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை