மங்களகரமான நாட்களில் பத்திரப் பதிவுக்கு கூடுதல் கட்டணம்.. ஐடியா பின்னணியில் இருக்கும் பிரபலம்!

by Sasitharan, Apr 13, 2021, 17:50 PM IST

கொரோனா ஊரடங்கு காரணமாகக் கடந்த சில மாதங்களாகப் பத்திரப்பதிவு துறையும் முடங்கியது. தமிழக அரசுக்கு வரவேண்டிய வருமானம் இதனால் மிகவும் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து அளிக்கப்பட்ட தளர்வுகளையடுத்து , தமிழகத்தில், பத்திரப்பதிவு அலுவலகங்கள் கடந்த ஏப்ரல் மாதம் 20ம் தேதி முதல் செயல்படத் தொடங்கியது. தினசரி குறிப்பிட்ட அளவிலேயே பத்திரப்பதிவுகள் நடத்தவும் அறிவுறுத்தப்பட்டது.

ஆனால், ஊரடங்கு , இ-பாஸ் நிர்ப்பந்தம் காரணமாகவும், கொரோனா அச்சுறுத்தல் காரணமாகவும், மக்கள் வெளியே நடமாடவே தடை விதிக்கப்பட்டிருந்ததால், பத்திரப்பதிவு அலுவலகத்திலும் பத்திரங்கள் ஏதும் பதிவு செய்யப்படவில்லை. பின்னர் படிப்படியாக பொது முடக்கத்தில் மேலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மீண்டும் பத்திரப்பதிவு தொடங்கியது.

அதையடுத்து, ஐப்பசி மாத முகூர்த்த நாளான்று தமிழகம் முழுவதும் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் மக்கள் குவிந்தனர். நல்ல நாள் என்பதால் அன்று ஒரே நாளில் மட்டும் 20,307 பத்திரப்பதிவு நடைபெற்றுள்ளது. இதன்மூலம் தமிழக அரசுக்கு ரூ.123.35 கோடி வருவாய் கிடைத்துள்ளது . இது பத்திரப்பதிவு துறையில் புதிய மைல்கல் என்றும், புதிய சாதனை என்றும் அப்போது கூறப்பட்டது. இப்போது இதே டெக்கினிக்கை தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.

அதாவது மங்களகரமான நாட்களில் பத்திரப் பதிவு அலுவலகங்கள் செயல்படும். அது போன்ற நாட்களில் கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படும் என்றும் கூறி அதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. துறையின் வருவாயை பெருக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையின் பின்னணியில் இருக்கும் நபர் ஐஏஎஸ் அதிகாரி பீலா ராஜேஷ். அவரின் யோசனையின் பெயரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. பீலா ராஜேஷ் தற்போது பதிவு துறை செயலாளராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

You'r reading மங்களகரமான நாட்களில் பத்திரப் பதிவுக்கு கூடுதல் கட்டணம்.. ஐடியா பின்னணியில் இருக்கும் பிரபலம்! Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை