நாம் தமிழர் கட்சியில் மிகப் பெரிய பேச்சாளராக வலம் வருபவர் காளியம்மாள். நாகப்பட்டினத்தைச் சேர்ந்த இவர், மீனவ சமுதாயத்தைச் சேர்ந்தவர். பிகாம் பட்டதாரியான காளியம்மாள் சமூக சேவையில் மிக்க ஆர்வம் உடையவர். கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கொண்டிருந்த சமயத்தில் நாம் தமிழர் கட்சியின் அறிமுகம் கிடைத்து, பின்னர் அக்கட்சியில் சேர்ந்தார். மீனவப் பெண் தொழிலாளர்களின் பிரச்சனைகளுக்காக தொடர்ந்து 5 வருடங்களுக்கு மேலாக குரல் கொடுத்து வருகிறார்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வடசென்னையில் நாம் தமிழர் சார்பில் போட்டியிட்ட காளியம்மாள். தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பூம்புகார் தொகுதி வேட்பாளரக களம் இறங்கினார்.
இந்நிலையில் இவர் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டவர்களை ஒரு விஷயத்தில் ஒரக்கம்கட்டியுள்ளார்.
தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வேட்பாளர்களின் பிரமாணப் பத்திரங்கள் வெளியிடப்படுவது வழக்கம். இதனை யார் வேண்டுமானாலும், எத்தனை முறை வேண்டுமானலும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அப்படி அதிக முறை பதிவிறக்கம் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரங்களுள் காளியம்மாளின் பிரமாணப் பத்திரமும் இடம்பெற்றுள்ளது.
இந்த விஷயத்தில்தான் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரை முந்தியிருக்கிறார் காளியம்மாள்.
தி.மு.க தலைவர் ஸ்டாலினின் பிரமாணப் பத்திரம் 10,557 முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பிரமாணப் பத்திரம் 10,529 முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் பிரமாணப் பத்திரம் 3,348 முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.
ஈபிஎஸ், ஒபிஎஸ், ஸ்டாலின் ஆகியோர்களை விட காளியம்மாளின் பிரமாணப் பத்திரம் 7,59,159 முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.