நீட் தோ்வு ஒத்திவைப்பு - முதுநிலை மருத்துவப்படிப்பு மாணவர்கள் மகிழ்ச்சி

by Ari, Apr 16, 2021, 07:40 AM IST

முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வை ஒத்திவைத்துள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் அறிவித்துள்ளார்.

MD., MS., உள்ளிட்ட மருத்துவ மேற்படிப்புகள், முதுநிலை மருத்துவப் பட்டயப் படிப்புகள் ஆகியவற்றின் மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருந்துது. முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வுக்காக நாடு முழுவதும் 129 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன.

தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, நெல்லை, சேலம், திருச்சி ஆகிய 6 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன.

இதற்கிடையே நாடெங்கும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாகப் பரவும் நிலையில், அனைத்துத் தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு தேவையா? என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கேள்வி எழுப்பினர்.

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வை ஒத்தி வைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன், டிவிட்டர் பதிவில்,குறிப்பிட்டுள்ளார். அதன்படி, வருகிற 18 ஆம் தேதி நடைபெற விருந்த, மருத்துவ முதுநிலை படிப்பிற்கான, நீட் தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாகவும், மருத்துவ மாணவர்களின் நலனை மனதில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த தேர்வு நடத்தப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் டுவிட்டர் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

You'r reading நீட் தோ்வு ஒத்திவைப்பு - முதுநிலை மருத்துவப்படிப்பு மாணவர்கள் மகிழ்ச்சி Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை