வாஷிங்டன் சுந்தர் ஓகே.. நட்டு நிலை?!.. பிசிசிஐ-யின் ஒப்பந்த பட்டியலில் யார் யார்?!

Advertisement

ஒவ்வொரு ஆண்டும் இந்திய கிரிக்கெட் அணிக்காக ஆடும் வீரர்களை ஏ+, ஏ, பி, சி ஆகிய பிரிவுகளாக பிரித்து ஊதிய ஒப்பந்தம் வெளியிடப்படும் அந்தவகையில், இந்த ஆண்டுக்கான வருடாந்திர ஒப்பந்த பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளசர்வதேச கிரிக்கெட் வீரர்களுக்கான மத்திய ஒப்பந்தத்தில் தமிழக வீரர் நடராஜன் பெயர் இடம்பெறவில்லை. இது தமிழக ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. இந்த ஒப்பந்தத்துக்கான காலம் என்பது, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 2020 முதல் 2021 செப்டம்பர் மாதம் வரையாகும். இதில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி, ரோகித் சர்மா, பும்ரா ஆகியோர் ஏ பிளஸ் பிரிவில் இடம் பிடித்துள்ளனர்.

ஹர்திக் பாண்ட்யா 2019-2020-ல் பி பிரிவில் இடம் பிடித்திருந்தார். தற்போது ஏ பிரிவிற்கு முன்னேற்றம் அடைந்துள்ளார். புவனேஷ்வர் குமார் ஏ பிரிவில் இடம் பிடித்திருந்தார். தற்போது பி பிரிவிற்கு பின்னடைந்துள்ளார். சாஹர் சி பிரிவிற்கு தள்ளப்பட்ட நிலையில், கேதர் ஜாதவ், மணிஷ் பாண்டே ஒப்பந்தத்தில் இடம்பெறவில்லை.

முகமத சிராஜ் மற்றும் அக்சார் பட்டேல் ஆகியோர் 2020-2021 ஒப்பந்தத்தில் இடம்பிடித்துள்ளனர். ஏ பிளஸ் பிரிவில் இடம் பிடித்துள்ளவர்களுக்கு 7 கோடி ரூபாயும், ஏ பிரிவில் இடம் பிடித்துள்ளவர்களுக்கு 5 கோடி ரூபாயும், பி மற்றும் சி பிரிவில் இடம் பிடித்துள்ளவர்களுக்கு முறையே 3 மற்றும் ஒரு கோடி ரூபாய் சம்பளமாக வழங்கப்படும்.

அஷ்வின், ஜடேஜா, புஜாரா, ரகானே, தவான், கேஎல் ராகுல், முகமது ஷமி, இஷாந்த் சர்மா, பண்ட், ஹர்திக் பாண்ட்யா ஏ பிரிவில் இடம் பிடித்துள்ளனர். சகா, உமேஷ் யாதவ், ஷர்துல் தாகூர், மயங்க் அகர்வால் பி பிரிவில் இடம் பிடித்துள்ளனர்.

குல்தீப் யாதவ், நவ்தீப் சைனி, தீபக் சாஹர், ஷுப்மான் கில், ஹனுமா விஹாரி, ஷ்ரேயாஸ் அய்யர், வாஷிங்டன் சுந்தர் சி பிரிவில் இடம் பிடித்துள்ளனர். தமிழக வீரர் நடராஜன் பெயர் இந்த பட்டியலில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
மேலும் செய்திகள்
sri-lanka-wins-last-test-against-bangladesh-captured
வங்காளதேசத்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்: தொடரை கைப்பற்றிய இலங்கை
ipl-cricket-will-hyderabad-beat-mumbai
மும்பை இந்தியன்ஸ் அணியை சுட்டெரிக்குமா ஐதராபாத் சன்ரைசர்ஸ்…?
warner-may-not-get-a-chance-in-playing-11-also-in-the-coming-matches
கேப்டன் பதவி பறிப்பை அடுத்து வீட்டுக்கு அனுப்ப பிளான்! டேவிட் வார்னருக்கு செக்!
suryakumar-yadav-shares-an-adorable-kiss-with-his-wife
கேமிரா இருப்பதை மறந்து தேவிஷா ஷெட்டிக்கு மும்பை அணி வீரர் முத்தம்...! இணையத்தில் வைரல்
post-a-hilarious-summary-of-their-win-over-rcb-using-chris-gayle-yuzvendra-chahal-s-reference
யாரு பலசாலி?- கிறிஸ்கெய்லுக்கு டஃப் கொடுத்த சஹால்.. வைரல் போட்டோ!
ravichandran-ashwin-s-wife-prithi-shares-family-s-ordeal-with-covid-19-urges-to-take-vaccine
``அது கஷ்டமாக இருந்தது'' - அஸ்வின் குடும்பத்தினர் 10 பேருக்கு கொரோனா!
adam-zampa-talk-about-ipl
ஐபிஎல் முக்கியம் என்பவர்கள் வீட்டில் ஒருவருக்கு கொரோனா வந்தால் தெரியும் - கொதிக்கும் ஆடம் ஜாம்பா
brett-lee-donates-1-bitcoin-for-oxygen-supplies-for-india
`பேட் கம்மின்ஸ் இன்ஸ்பிரேஷன்... 40 லட்சம் நிதியுதவி அறிவித்த பிரட் லீ!
bcci-clarifies-players-fear
கவலை கொள்ள வேண்டாம்!.. வீரர்களுக்கு பிசிசிஐ கொடுத்த உத்தரவாதம்
cricket-player-natrajan-surgery
கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு காலில் ஆபரேஷன்.. என்ன ஆச்சு??

READ MORE ABOUT :

/body>