ஆக்சிஜன் வழங்க முடியாதது வெட்கக்கேடானது.. யோகியை விமர்சித்த நீதிமன்றம்!

by Sasitharan, Apr 28, 2021, 20:13 PM IST

உத்தரப் பிரதேசத்திலும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இது தொடர்பாக பேசிய அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், உத்தரப் பிரதேசத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை இல்லை. ஆக்ஸிஜன் பற்றாக்குறை என்று கூறும் தனியார் மருத்துவமனையின் மீது வழக்குப் பதிவு செய்யப்படும். சொத்துகள் பறிமுதல் செய்யப்படும் என்று எச்சரிக்கைவிடுத்தார்.

இந்த நிலையில், உத்திரபிரதேசத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு தவறிட்டது என பொதுநல வழக்கு போடப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதிகள், ``சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆன பின்னும் மக்களுக்கு ஆக்சிஜன் வழங்க முடியாதது வெட்கக்கேடானது. அரசு மருத்துவமனைக்கு சென்றால் கொரோனாவுக்கு இறக்காதவர்கள்கூட டெங்கு வந்து இறந்துவிடுவர் போல. அந்த அளவுக்கு அடிப்படை வசதிகள் இன்றி மோசமான நிலையில் மருத்துவமனைகள் உள்ளன. கொரோனா தடுப்பு விவாகரத்தில் யோகி அரசு, முரணான அணுகுமுறையை கைவிட்டு, நீதிமன்றத்தின் அறிவுரைகளை பின்பற்ற வேண்டும் என கடுமையாக சாடினார்.

You'r reading ஆக்சிஜன் வழங்க முடியாதது வெட்கக்கேடானது.. யோகியை விமர்சித்த நீதிமன்றம்! Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை