அதிமுகவின் முன்னாள் அமைச்சர் அரங்கநாயகம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்..
எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்தவர் அரங்கநாயகம். தொடர்ந்து ஜெயலலிதாவின் அமைச்சரவையிலும் அமைச்சராக நீடித்தார். கட்சியின் அனுபவமிக்க மூத்த உறுப்பினரான அரங்கநாயகம்.
சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பலனின்றி காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக கிண்டியில் உலா பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கோவை தொண்டாமுத்தூர், கோவை மேற்கு தொகுதியில் இருந்து 2 முறை எம்.எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டவர். மேலும், அதிமுக ஆட்சியில் கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்தார். இவர் அமைச்சராக இருந்த காலக்கட்டத்தில் பல்வேறு தனியார் கல்லூரிகளை தமிழகத்தில் நிறுவினார்.
தமிழகத்தில் இன்று அதிக அளவில் தனியார் கல்லூரிகள் நிறுவப்பட்டதற்கு மற்றொரு முக்கிய காரணமாக இவர் திகழ்கிறார். 95 வயதான அரங்கநாதன் சென்னையில் வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். .அவரது மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
எம்.ஜி.ஆர். ஆட்சியில் கல்வி அமைச்சராக இருந்தவர் செ.அரங்கநாயகம். கடந்த 2006இல் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த அவர், தேர்தல் பிரிவு செயலாளராக நியமிக்கப்பட்டார். இதனிடையே கடந்த ஓராண்டாக கட்சியில் அவருக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை எனக் கூறி திமுகவில் இருந்து விலகினார்.