“தோற்றாலும், ஜெயித்தாலும் மீசைய முறுக்கு” டைலாக்கை கேட்டு அடுத்த தேர்தலுக்கு அஸ்திவாரம் போட்ட சீமான்!

by Ari, May 3, 2021, 11:56 AM IST

நாடாளுமன்ற தேர்தலாக இருந்தாலும் சரி, சட்டப்பேரவை தேர்தலாக இருந்தாலும் சரி அதில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் புதுமையை புகுத்தி வருகிறார். வேட்பாளர்கள் தேர்விலும் 50 சதவீதம் பெண் வேட்பாளர்களை களம் இறக்கி விடுகிறார்.

நாம் தமிழகர் கட்சி எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்காமல் தனித்தே போட்டியிட்டு வருகிறது. இவ்வாறு கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கணிசமான வாக்குகளை பெற்றது.

கடந்த 2016 ஆம் ஆண்டு வெறும் 1.5 சதவீதமாக இருந்த இதன் வாக்குச் சதவீதம் அடுத்த 3 ஆண்டுகளில் 5.58 சதவீதமாக உயர்ந்துள்ளது.

தனித்தே போட்டியிட்டு மற்ற கட்சிகளை திரும்பி பார்க்கும் அளவுக்கு வளர்ந்து வரும் நாம் தமிழர் கட்சி, இந்த முறை நடந்த சட்டமன்ற தேர்தலிலும் 234 தொகுதிகளில் தனித்து போட்டியிட்டது. 234 தொகுதிகளில் 117 தொகுதிகளில் ஆண் வேட்பாளர்களையும், 117 தொகுதிகளில் பெண் வேட்பாளர்களையும் நிறுத்தி களம் கண்டது. அந்தவகையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிட்டார். 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி ஒரு இடத்தில் கூட முத்திரையை பதிக்க முடியவில்லை. அனைத்திலும் தோல்வியை தழுவியது. இதில் சீமான் போட்டியிட்ட திருவொற்றியூர் தொகுதியில் 48 ஆயிரத்து 597 வாக்குகளை அவர் பெற்றார்.

திருவொற்றியூர் இதில் சீமான் போட்டியிட்ட திருவொற்றியூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் குப்பனை விட வாக்குகள் குறைவாக பெற்று 3ஆம் இடத்தில் உள்ளார்.

ஒவ்வொரு தேர்தலில் வாக்கு சதவீதத்தை அதிகரித்துக்கொண்டே செல்லும் நாம்தமிழர் கட்சி அடுத்த தேர்தலிலும் களம் இறங்கும் என கட்சி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

You'r reading “தோற்றாலும், ஜெயித்தாலும் மீசைய முறுக்கு” டைலாக்கை கேட்டு அடுத்த தேர்தலுக்கு அஸ்திவாரம் போட்ட சீமான்! Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை