தமிழக அரசு மற்றும் அரசியல் சூழல் குறித்து இன்று செய்தியாளர்களிடம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்துக்காக நிலம் எடுக்கும் பணி 85% நிறைவடைந்துள்ளது. தமிழகத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு நாளை காலை 10 மணி அளவில் நீர் திறக்கப்படும்.
தமிழகத்தில் தற்போது நடந்து வரும் வருமான வரி சோதனை என்பது சட்டத்துக்குப் புறம்பாக செயல்பட்டவர்கள் மீதான ஒரு நடவடிக்கை தான். ஒப்பந்தம் எடுத்துள்ள நிறுவனங்கள் முறையாக வரி செலுத்தாவிடில் வருமான வரி சோதனை நடப்பது வழக்கமானதுதான்.
அந்நிறுவனத்தார் எனக்கு வேண்டியவர்கள் எனப் பார்த்தால் தமிழகத்தில் எனக்குப் பல உறவினர்கள் உள்ளனர். இதெல்லாம் பார்த்தால் பணிபுரிய முடியாது.
தமிழகத்தில் தற்போது மழை நின்றுவிட்டது. ஸ்டாலின் லண்டன் சென்ற பின்னர் தான் தமிழகத்துக்கு மழை கிடைத்தது. தற்போது ஸ்டாலின் திரும்ப வந்துவிட்டதால் மழை நின்றுவிட்டது” எனக் கூரினார்.