அதிகரித்து வரும் மேட்டூர் அணையின் நீர்மட்டம்: 105 அடியை எட்டியது

Jul 18, 2018, 21:14 PM IST

மேட்டூர் அணை நாளை திறக்கப்பட உள்ள நிலையில், அணையின் நீர்மட்டம் 105 அடியை எட்டியது.

கர்நாடக மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் எதிரொலியாக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் உள்ள அணைகள் மிகவேகமாக நிரம்பி வருகின்றன.

குறிப்பாக கிருஷ்ணராஜ சாகர், கபினி, ஹேமாவதி, ஹாரங்கி அணையில் இருந்து ஒரு லட்சத்து பத்தாயிரம் கன அடிக்கு மேல் தமிழகத்துக்கு திறந்து விடப்பட்டுள்ளது. இதனால், தமிழக அணைகளில் நீரின் அளவு கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

இதனால், இன்றைய நிலவரப்படி மேட்டூர் அணைக்கு நொடிக்கு 1,04,000 கன அடியில் இருந்து 1,08,000 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால், நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 105 அடியை எட்டியது.
இதன் எதிரொலியாக, காவிரி கரையோர பகுதி மக்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், காவிரி டெல்டா பாசனத்திற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மேட்டூர் அணையை திறந்து வைக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

You'r reading அதிகரித்து வரும் மேட்டூர் அணையின் நீர்மட்டம்: 105 அடியை எட்டியது Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை