'ஸ்டாலின் காங்கிரஸ் கட்சியின் ஜீரோ செய்தித்தொடர்பாளராக உள்ளார்' என பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் தாக்கிப் பேசியுள்ளார்.
இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் பேசினார். அப்போது அவர் கூறுகையில், "தமிழகத்தில் நலனை எப்போதும் காங்கிரஸ் மற்றும் திமுக ஆகிய கட்சிகள் தான் புறக்கணிக்கின்றன.
நடிகர் ரஜினிகாந்த் போன்றோர் தமிழக்த்துக்குக் கிடைக்கும் நல்ல நலன்களை ஆதரிக்கின்றனர். அப்படி ஆதரித்தால் அவர் பாஜக-வைச் சேர்ந்தவர் என முத்திரைக் குத்துவதா? அப்படிப் பார்த்தால் காங்கிரஸ் கட்சியின் ஜீரோ செய்தித் தொடர்பாளர் தான் ஸ்டாலின்.
நாடாளுமன்றத்தில் ஒரு உறுப்பினர் கூட இல்லாத திமுக எவ்வாறு நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவு தர முடியும்? ஸ்டாலின் ஒரு பொய்யான அறிக்கையைப் பரப்புரை செய்கிறார்" எனக் குற்றம் சுமத்திப் பேசினார்.