'என்னுடைய டெல்லி பயணம் அரசியல் நிமித்தமானது அல்ல' என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திடீரென டெல்லிக்குப் பயணமானார். டெல்லி நாடாளுமன்றத்தில் மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பாஜக-வுக்கு ஆதரவாக வாக்களித்து பாஜக கூட்டணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதன் பின்னர் உடனடியாக தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உடனடியாக டெல்லிக்குப் பயணமானார். இப்பயணம் தமிழக அரசியல் சூழலில் பரபரப்பாகப் பேசப்பட்டது. ஆனால், இதுதொடர்பாக எந்த ஒரு விளக்கமும் தமிழக அரசின் சார்பிலோ பன்னீர்செல்வம் சார்பிலோ வழங்கப்படவில்லை.
இத்தகைய சூழலில் தற்போது துணை முதல்வர் இதற்கான விளக்கத்தை அளித்துள்ளார். அதில், "டெல்லிக்கு வந்தது அரசியல் பயணமோ அல்லது அரசு சார்ந்த பயணமோ இல்லை. மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திப்பது மரியாதை நிமித்தமானது.
தமிழகத்தைப் பொறுத்தவரையில் இன்னும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான காலநிலை உருவாகவில்லை" எனக் கூறியுள்ளார் ஓ.பன்னீர்செல்வம்