Advertisement

எந்த துறையிலும் தவறு நடந்ததாக புகார் இல்லை - எடப்பாடி பழனிசாமி

தமிழக அரசின் எந்த துறையிலும் தவறு நடந்ததாக புகார் இல்லை என்றும் குற்றச்சாட்டு கூறுவதால் ஒருவர் குற்றவாளி ஆகிவிட முடியாது என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

Edappadi Palanisamy

இது குறித்து செயதியாளர்களிடம் முதலமைச்சர் கூறுகையில், பெட்ரோல் டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை மத்திய அரசுதான் குறைக்க வேண்டும்.

தமிழக அரசு வாட் வரியை குறைப்பது குறித்து பரிசீலிக்கும். வரியை மத்திய அரசுதான் உயர்த்திக்கொண்டே செல்கிறது.

மேகதாது விவகாரத்தில் தமிழக அரசின் முடிவு தெளிவாக உள்ளது. மேகதாதுவில் எக்காரணத்தைக் கொண்டும் அணை கட்டக்கூடாது. மத்திய அரசு அணை கட்டுவதற்கு அனுமதி அளிக்கக் கூடாது.

ஓட்டுக்குப் பணம் கொடுப்பதாக வெளியான தகவல் தவறானது. ஓட்டுக்கு பணம் கொடுப்பதும் குற்றம், வாங்குவதும் குற்றம். பணம் கொடுத்து ஓட்டு வாங்கும் நிலையில் அதிமுக இல்லை, தமிழக அரசின் எந்த துறையிலும் தவறு நடந்ததாக புகார் இல்லை” என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.