பிரம்மாண்டமாக தயாராகும் கருணாநிதி சிலை- ஸ்டாலின் பார்வையிட்டார்

கருணாநிதி சிலை- ஸ்டாலின் ஆலோசனை

Sep 11, 2018, 13:30 PM IST

பிரம்மாண்டமாக தயாராகிவரும் கருணாநிதியின் சிலையை திமுக தலைவர் ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கருணாநிதி முழு உருவச்சிலை

திமுக தலைவராக தொடர்ந்து 50 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றியவர் மு.கருணாநிதி. தமிழக முதலமைச்சாரகவும் பணியாற்றியுள்ள கருணாநிதி, சமீபத்தில் மறைந்ததையடுத்து அவருக்கு சிலை வடிக்கும் பணி நடைபெற்றுவருகிறது.

அண்ணா, காமராஜர், முரசொலி மாறன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களுக்கும் தத்ரூபமாக சிலை வடித்து புகழ்பெற்ற சிற்பிகள் தீனதயாளன், கார்த்திக் ஆகியோர்தான் கருணாநிதியின் சிலையையும் வடிவமைத்து வருகின்றனர்.

சென்னையை அடுத்த மீஞ்சூர் அருகே தயாராகி வரும் அந்த சிலையை பார்வையிட்ட திமுக தலைவர் ஸ்டாலின், முகத்தின் நாடி பகுதியில் சிறிய வளைவு இருக்குமாறு வடிவமைக்க வேண்டும் என ஆலோசனை வழங்கியுள்ளார்.

8 அடி உயரத்தில் தயாராகி வரும் அந்த சிலையை திமுக தலைமையகமான அண்ணா அறிவாலய முகப்பில் அண்ணா சிலை அருகே வைக்க உள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

You'r reading பிரம்மாண்டமாக தயாராகும் கருணாநிதி சிலை- ஸ்டாலின் பார்வையிட்டார் Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை