சீனா மற்றும் இந்தியா அமெரிக்கவிடமிருந்து சுரண்டுவதாக அதிபர் ட்ரம்ப் குற்றம் சாற்றியுள்ளார்.
பிற நாடுகளின் பொருட்களுக்கு தாங்கள் குறைந்த வரி விதிக்கும் நிலையில் அமெரிக்கப் பொருட்களுக்கு அந்த நாடுகளில் கூடுதல் வரி விதிக்கப்படுவதாக ட்ரம்ப் புகார் எழுப்பி வருகிறார். ஆனால் இறக்குமதியாகும் பொருட்களுக்கு வரி விதிக்கும் விவகாரத்தில் சீனா, இந்தியா போன்ற நாடுகளை அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிவது குறிப்பிடதக்கது.
அண்மையில் சீனா அமெரிக்க இரு நாடுகளும் மற்ற நாட்டின் இறக்குமதிப் பொருட்களுக்கு வரி விதித்தன. இதனால் உலகளாவிய வர்த்தகப் போர் நடைபெறும் சூழல் உருவானது. இந்த நிலையில் சீனப் பொருட்களுக்கு மேலும் இந்திய மதிப்பில் சுமார் 14 லட்சம் கோடி ரூபாய் (200 பில்லியன் டாலர்) மதிப்பிலான கூடுதல் வரி விதித்துள்ளது. குறிப்பாக சீனாவின் இணையத் தொழில்நுட்பத் தயாரிப்புகளுக்கு அதிக வரி விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை பல நாடுகளும் விமர்சித்துள்ளன.
இதுகுறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சீன பொருட்களுக்கு அமெரிக்கா கூடுதல் வரி விதித்தது குறித்து சிலர் குறை கூறுகின்றனர். ஆனால் உலக சந்தையில் அமெரிக்க பொருட்களை பின்னுக்கு தள்ள பல நாடுகளும் சதி செய்கின்றன. அமெரிக்காவில் எந்த வரியும் இல்லாமல் சீனா பொருட்களை விற்பனை செய்து பல கோடி ரூபாய் குவித்து வருகிறது. ஒரு ஆண்டில் மட்டும் 35 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு அமெரிக்காவிடம் இருந்து சீனா லாபம் சம்பாதித்துள்ளது. இதையே தான் இந்தியா செய்கிறது. ஐரோப்பிய நாடுகள் செய்கின்றன.
எங்களை ‘பிக்கி பேங்’ ஒரு உண்டியல் போல பயன்படுத்துகின்றனர். தங்களின் பணத் தேவைக்கு எங்களை பயன்படுத்திக் கொள்கின்றனர். இதனை நாங்கள் அனுமதிக்க முடியாது எனக் கடுமையாக கூறினார்.