ஈழப் போரில் திமுகவும் காங்கிரசும் போர்க்குற்றவாளிகள் - அதிமுக

ஈழப் போரில் திமுகவும் காங்கிரசும் போர்க்குற்றவாளிகள்?

Sep 20, 2018, 11:36 AM IST

ஈழப் போரில் திமுகவும் காங்கிரசும் போர்க்குற்றவாளிகள் என அதிமுக குற்றம் சாட்டியுள்ளது.

ஈழப் போர் அல்லது இலங்கை போர் என்பது இலங்கை இனப்பிரச்சினை காரணமாக, தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட்ட இலங்கைத் தமிழ்ப் போராளிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே ஏற்பட்ட வன்முறைப் போராட்டங்களையும், போர்களையும் முதன்மையாகக் குறிக்கின்றது.

இப்போரானது சிங்களவருக்கும், தமிழருக்கும் இடையில் பல 23 ஜீலை 1983 முதல் 26 ஆண்டுகள் நடைபெற்ற இப்போர் 2009 இல் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதுடன் முடிவுக்கு வந்தது. இது குறிந்து இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே டெல்லியில் சில தினங்களுக்கு முன்பு தொலைக்கட்சியில் பேட்டியளித்திருந்தார் அதில் இலங்கையில் இறுதி கட்ட போரின் போது, இந்திய அரசு தங்களுக்கு உதவியதாக குறிப்பிட்டிருந்தார்.

இந்த பேட்டியை தொடர்ந்து ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் தலைமை தாங்கினார். கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிலையில், அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில், இது குறித்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

DMK-Cong

அதிமுக அரசு, அப்போது ஆட்சியில் இருந்த திமுக மற்றும் காங்கிரசை போர்குற்றவாளியாக அறிவித்து, திமுகவுக்கு எதிராக மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடத்தப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார்.

அதன்படி, இலங்கை ஈழப் போரில் அப்பாவி தமிழர்களின் படுகொலைக்கு திமுகவும், காங்கிரசும் காரணம். எனவே, இந்த படுகொலைக்கு தொடர்புடையவர்களை போர்க்குற்றவாளிகளாக அறிவித்து தண்டிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் வரும் 25-ஆம் தேதி திமுகவை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும் எனவும் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

You'r reading ஈழப் போரில் திமுகவும் காங்கிரசும் போர்க்குற்றவாளிகள் - அதிமுக Originally posted on The Subeditor Tamil

More Politics News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை