அனைவரும் படித்து நாகரீக தன்மைய அடைந்தபோதிலும், ஆணவக் கொலைகள் நடந்துகொண்டு இருப்பது நாம் வாழ்வது மனித சமுதயதிலா என்று யோசிக்க வைக்கிறது.
சில தினங்களுக்கு முன்பு தெலங்கானாவை அதிரவைத்த ஆணவக் கொலையில், பிரனய் குமாரை கொலை செய்வதற்காக அம்ருதாவின் தந்தை மாருதிராவ், பீகார் கூலிப்படையிடம், ஒரு கோடி ரூபாய் பேரம் பேசிய தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
அம்ருதா அளித்த புகாரின்பேரில் தலைமறைவாக இருந்த மாருதிராவ், அவருடைய சகோதரர் ஷரவன், அவருடைய நண்பர் அப்துல் கரீம் ஆகியோரை தெலங்கானா காவல்துறையினர் நேற்று கைதுசெய்தனர்.
இதனையடுத்து, தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்னர் பீகாரில் பதுங்கி இருந்த கொலையாளி சர்மா, அஸ்கர் அலி மற்றும் அவனது கூட்டாளிகளை கைது செய்த போலீசார் அவர்களை ஹைதராபாத்துக்கு அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர்.
இந்த பரபரப்பு அடங்குவதற்க்கு முன்பு மிண்டும் ஒரு ஆவணக்கொலை,
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தின் மிக முக்கிய பகுதியான எர்ரகாடா சாலையில் சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட மகளை பெற்ற தந்தையே சரமாரியாக அரிவாளால் தாக்கியுள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. பெற்றோரது எதிர்ப்பை மீறி, சந்தீப் என்ற இளைஞரை மாதவி என்ற இளம்பெண் திருமணம் செய்து கொண்டர்.
இதனால் ஆத்திரம் அடைந்த பெண்ணின் தந்தை புத்தாடை எடுத்து தருவதாக கூறி எர்ரகாடா சாலைக்கு வரவழைத்து ஆட்களை வைத்து தம்பதிகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த தம்பதிகள் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து விழுந்தனர்.
இந்த தாக்குதலில் மாதவிக்கு முகம் மற்றும் கைகளிலும், சந்தீப்பிற்கு கழுத்துப் பகுதியிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மிகவும் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டுள்ள அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் மகளின் கணவனை தாக்கிய மாதவியின் அப்பா, எர்காடா சாலை காவல்நிலையத்தில் சரணடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.