பெரிய பதவிக்கு லாயிக்கற்றவர்கள்... இம்ரான் கான் காட்டம்

பெரிய பதவிக்கு லாயிக்கற்றவர்கள்

by Isaivaani, Sep 23, 2018, 16:34 PM IST

இரு நாடுகளிடையே நடைபெற இருந்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டது குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அடுத்த வாரம் நடைபெற உள்ள ஐ.நா சபைக்கூட்டதின் போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் இடையிலான பேச்சுவார்த்தையை நடத்த இரு நாடுகளும் முடிவு செய்திருந்தன. இதனால், 2016-ம் ஆண்டுக்குப் பின் மீண்டும் பேச்சு தொடங்க இருப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில், காஷ்மீரில் போலீஸார் 3 பேரை வீட்டில் இருந்து கடத்திச் சென்ற ஹிஸ்புல் தீவிரவாதிகள் அவரைச் சுட்டுக்கொலை செய்து வீசிவிட்டுச் சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த இந்தியா பாகிஸ்தான் உடனான பேச்சுவார்த்தையை ரத்து செய்வதாக அறிவித்தது.

இது குறித்து டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதவியிட்டுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், " பேச்சுவார்த்தை தொடர்பான இந்தியாவின் அகங்காரமான, எதிர்மறையான செயல்பாடுகள் வேதனை அளிக்கிறது. தொலைநோக்குப் பார்வை இல்லாத எதையும் மிகப்பெரிய அளவில் சிந்திக்க இயலாத, அற்ப மனிதர்கள் மிகப்பெரிய பதவிகளில் இருப்பதை நான் என்னுடைய வாழ்க்கை முழுவதும் பார்த்திருக்கிறேன், அதைக் கடந்துதான் வந்திருக்கிறேன்" என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.

You'r reading பெரிய பதவிக்கு லாயிக்கற்றவர்கள்... இம்ரான் கான் காட்டம் Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை