ராஜஸ்தானில் முதலமைச்சர் வசுந்தரா ராஜே முன்னிலையிலேயே, அம்மாநில பாஜக தலைவர்- கட்சி பிரமுகர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அங்குள்ள அல்வார் நகரில் பாஜகவின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அம்மாநில முதலமைச்சர் வசுந்தராராஜே பங்கேற்று பேசினார். மேடையில் அமைச்சர்கள், கட்சி தலைவர், பிரமுகர்கள் அமர்ந்திருந்தனர்.
கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, பா.ஜ.க பிரமுகரான தேவி சிங் செகாவாத் மேடைக்கு சென்றார். திடீரென ரோஹிடாஸ் சர்மாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இருவரும் தகாத வார்த்தையில் திட்டியபடி, ஒருவருக்கொருவர் குற்றம்சாட்டிக் கொண்டிருந்தனர்.
வாக்குவாதம் முற்றி மோதல் ஏற்படும் சூழல் உருவாகியது. இதனால் பொதுக்கூட்ட மேடையில், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து முதலமைச்சரின் பாதுகாப்பு அதிகாரிகள், தேவி சிங்கை வலுகட்டாயமாக மேடையில் இருந்து கீழே இறக்கிவிட்டனர்.