நிதியமைச்சா் ப.சிதம்பரத்தின் மகன் காா்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான ரூ.54 கோடி மதிப்புள்ள அசையா சொத்துகளை அமலாக்கத்துறையினா் முடக்கம் செய்துள்ளனா்.
2007-2008ம் ஆண்டில் அயல்நாட்டு முதலீடு மேம்பாட்டு வாரியம் மூலம், ஐ.என்.எக்ஸ் மீடியா குழுமத்திற்கு ஒப்புதல் வழங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக சர்ச்சை எழுந்தது. இதற்காக, முன்னாள் நிதியமைச்சா் ப.சிதம்பரத்தின் மகன் காா்த்தி சிதம்பரம் உதவியதாக அமலாக்கத்துறையினா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
இந்த வழக்கில் காா்த்தி சிதம்பரத்தை சி.பி.ஐ. அதிகாாிகள் கைது செய்து விசாரணை நடத்தினா். இந்நிலையில் காா்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான ரூ.54 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறையினா் முடக்கம் செய்துள்ளனா். டெல்லி, ஊட்டி, கொடைக்கானல் மற்றும் வெளிநாடுகளில் உள்ள சொத்துகளை முடக்கம் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மேலும் காா்த்தி சிதம்பரத்தின் வங்கி கணக்கையும் அமலாக்கத்துறையினா் முடக்கம் செய்துள்ளனா். இதே போன்று இந்த வழக்கில் தொடா்புடைய தொழில் அதிபா் இந்திராணி முகா்ஜியின் சொத்துகளையும் அமலாக்கத்துறையினா் முடக்கியுள்ளனா்.
ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு ஏா்செல்-மேக்சிஸ் வழக்கின் விசாரணை தீவிரம் அடைந்துள்ள நிலையில் காா்த்தி சிதம்பரத்தின் சொத்துகள் முடக்கம் செய்யப்பட்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இவ்வழக்கு இரு தினங்களுக்கு முன்பு டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரம் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானாா் இதைனத் தொடா்ந்து வழக்கு விசாரணையை நவம்பா் 1ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது மேலும் அதுவரை சிதம்பரம் மற்றும் காா்த்தி சிதம்பரம் ஆகியோரை கைது செய்யக் கூடாது என்றும் அறிவித்துள்ளது குறிப்பிடதக்கது.