மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் வெண்கல சிலை தயாரிப்புப் பணிகளை திமுக தலைவர் ஸ்டாலின் 2-வது முறையாக பார்வையிட்டார்.
மீஞ்சூரை அடுத்த புதுப்பேடு பகுதியில் கருணாநிதியின் 8 அடி உயர சிலை செய்யும் பணி நடந்து வருகிறது. சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் வைப்பதற்காக இந்த சிலை வடிவமைக்கப்படுகிறது.சிற்பிகள் தீனதயாளன், கார்த்திக் ஆகியோர் இந்த சிலையை வடிவமைத்து வருகிறார்கள்.
முதல்முறையாக சிலை வடிவமைப்பு பணியை பார்வையிட்ட தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் சிறு மாற்றங்கள் செய்யும்படி ஆலோசனை வழங்கினார். இந்நிலையில் 2-வது முறையாக புதுப்பேடு சென்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கருணாநிதியின் வெண்கல சிலையை பார்வையிட்டார்.
சிலையை துரிதமாக வடிவமைத்து தருமாறு சிற்பி தீனதயாளினிடம் அறிவுறுத்தினார். முன்னாள் அமைச்சர்கள் முன்னால் அமைச்சர்கள் எ.வ. வேலு, பொன் முடி,கே.பி.பி.சாமி, கா.சுந்தரம் உள்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.