சோதனைகளையும் சவால்களையும் மாணவா்களுக்கு படிக்கட்டுகளாக மாற்றிய சங்கரன்!

Shankar IAS Academy founder suicide funeral

by Manjula, Oct 12, 2018, 15:43 PM IST

குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ள திரு.சங்கரன் மரணம் அனைவரையும் சோகத்தில் ஆழ்தியுள்ளது. சங்கா் ஐ.ஏ.எஸ். அகாடமி நிறுவனா் சங்கரன் கடந்து வந்த பாதையையும் இங்கு அறியலாம்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை அடுத்த நல்லகவுண்டம்பாளையம் என்ற கிராமத்தில் இருந்து ஐ.ஏ.எஸ். ஆகவேண்டும் என்ற கனவோடு சென்னையை நோக்கி பயணித்தவா் சங்கரன். 2 முறை சிவல் சர்வீஸ் தோ்வில் நோ்காணல் வரை சென்ற சங்கரன் 3வது முறை வயது வரம்பு காரணத்தால் அவரது ஐ.ஏ.எஸ். கனவு நிறைவேறாமல் சென்றது.

தான் நினைத்ததை அடையமுடியவில்லை என்றாலும் தனது பயணத்தில் சந்தித்த சிக்கல்களை அடுத்தக்கட்ட மாணவா்களுக்கு படிக்கட்டுகளாக மாற்றும் முயற்சியில் கடந்த 2004ம் ஆண்டு சங்கா் ஐ.ஏ.எஸ். அகாடமியை தொடங்கி ஏழை, எளிய மாணவா்களுக்கு குறைந்த செலவில் பயிற்சி அளித்து வந்தாா்.

ஆரம்ப காலத்தில் 34 மாணவா்களுடன் தொடங்கப்பட்ட பயிற்சி மையத்தில் தற்போது வரை 1 லட்சத்திற்கும் அதிகமான மாணவா்கள் பயிற்சி பெற்றுள்ளனா். இந்த பயிற்சி மையத்தில் படித்த 700 போ் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். அதிகாாிகளாக தோ்ச்சி பெற்றுள்ளனா். மொத்தமாக இங்கு பயிற்சி பெற்ற 900க்கும் அதிகமானவா்கள் சிவில் சா்வீா் தோ்வில் வெற்றி பெற்றுள்ளனா்.

தமிழகம் உட்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் இங்கு பயின்ற மாணவா்கள் பொறுப்பு வகித்து வருகின்றனா். குறிப்பாக 27 நாடுகளில் வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் அதிகாாிகளாக பொறுப்பு வகித்து வருகின்றனா். தனது சோதனைகளையும், சவால்களையும் மாணவா்களுக்கு படிக்கட்டுகலாக மாற்றிய சங்கரன் குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளாா்.

இவரது இறுதி சடங்கில கலந்து கொண்ட பிரபலங்கள் இரங்கல்தெரிவித்தார்கள் அவரது உடல் ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது.

உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல ஏற்பாடு நடந்து வருகிறது ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில் நடிகர்கள், அரசியல்வாதிகள் மற்றும் மாணவர்கள் அவரிடம் படித்து அரசு அதிகாரியாக ஆனவர்கள் என பலர் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அவரது அண்ணா நகர் சங்கர் ஐஏஎஸ் அகடாமியில் சிறிது நேரம் வைத்து விட்டு செந்த ஊருக்கு எடுத்து செல்ல ஏற்படுகள் நடைபெறுகிறது.

பல மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருந்தவர் இப்படி ஒரு முடிவை எடுத்திருப்பார் என்று இன்னும் நம்ப முடியவில்லை. இவரின் மரணம் பல மாணவர்களிடையே மீளாத் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.

You'r reading சோதனைகளையும் சவால்களையும் மாணவா்களுக்கு படிக்கட்டுகளாக மாற்றிய சங்கரன்! Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை