கருணாநிதியின் அன்பை பெற்ற நான், பல சதிகளால் திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டேன் என முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கூறியுள்ளார்.
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் புகழஞ்சலி கூட்டம் திண்டுக்கல்லில் நடந்தது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய மு.க.அழகிரி, "நான் திமுகவில் இருக்கிறேனா இல்லையா என்பது தெரியாது. ஆனால், தொண்டர்கள் வழிநெடுகிலும் திமுகவின் கட்சி கொடியை கட்டும் அளவுக்கு உள்ளுணர்வு தூண்டப்பட்டுள்ளது."
"பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றியவர் கருணாநிதி, அவரிடம் இருந்து சுயமரியாதை உழைப்பை கற்றுக்கொண்டேன். கருணாநிதி என்னை வெளியேற்றவில்லை. தொண்டர்களுக்காக பேசிய என்னை சதிகாரர்களே வெளியேற்றினார்கள்."
"பதவிக்கு ஆசைப்படுபவர்கள்தான் மு.க.ஸ்டாலினுடன் இருக்கின்றனர். தேர்தல் வரும் போது, எப்படி தாக்க வேண்டும் என சொல்கிறேன் காத்திருங்கள். திமுகவில் மாற்றம் கொண்டு வரவேண்டிய நேரம் வந்துவிட்டது. தேர்தல் வரும்போது, உழைப்பையும், திறமையையும் காட்டுவோம்." என மு.க.அழகிரி பேசினார்.