நாடாளுமன்ற தேர்தல்: தி.மு.க கூட்டணியில் வைகோ!

Advertisement

திமுக கூட்டணியில் 4 தொகுதிகள் கட்டாயம் வேண்டும் என்றும் அதுவும் தான் கேட்கும் நான்கு தொகுதிகளும் வேண்டும் என்றும் வைகோ நெருக்கடி கொடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே தொகுதிப் பங்கீட்டை முடித்து பிரச்சாரத்தையும், தேர்தல் பணிகளையும் தொடங்க வேண்டும் என்பது தான் ஸ்டாலினின் தற்போதைய திட்டம். இதற்காக கடந்த 15 நாட்களாகவே அண்ணா அறிவாலயம் மிகவும் பிசியாக இயங்கி வருகிறது. ஏதோ ஒரு காரணத்தைகூறி கூட்டணி கட்சித்தலைவர்கள் அனைவரும் ஸ்டாலினை சந்தித்து பேசிவிட்டு வந்துவிட்டனர்.

காரணம் என்ன சொல்லப்பட்டாலும் ஸ்டாலினுடனான தலைவர்கள் சந்திப்பு முழுக்க முழுக்க நாடாளுமன்ற தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்புடையது தான் என்கிறார்கள். அந்த வகையில் வைகோ தனது மதிமுக வுக்கு 4 தொகுதிகள் வேண்டும் என்று ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த 2004ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் திமுக அமைத்த மெகா கூட்டணியில் ம.தி.மு.கவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதையும் வைகோ அப்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

போட்டியிட்ட நான்கு தொகுதிகளிலும் மதிமுக வெற்றி பெற்றதையும், நாற்பது தொகுதியையும் திமுக கூட்டணி கைப்பற்றியதை பற்றியும் வைகோ ஸ்டாலினிடம் விரிவாக பேசியுள்ளார். மேலும் கடந்த முறை பாஜக கூட்டணியில் 7 இடங்கள் தனதுகட்சிக்கு ஒதுக்கப்பட்டதையும் வைகோ ஸ்டாலினிடம் எடுத்துரைத்துள்ளார். எனவே 4 தொகுதிகளுக்கு குறைவில்லாமல் ஒதுக்கினால் தான் நன்றாக இருக்கும் என்று வைகோ கூறியுள்ளார். அதுமட்டும் இல்லாமல் விருதுநகர், தேனி, ஈரோடு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய நான்கு தொகுதிகளை குறிப்பிட்டும் வைகோ தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்றும் ஸ்டாலினிடம் கேட்டுக் கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

ஆனால் விருதுநகர் தொகுதியை காங்கிரஸ் கட்சி விட்டுக் கொடுக்காது. இதே போல் காஞ்சிபுரம் தொகுதியில் போட்டியிட தி.மு.க விரும்பும் எனவே இந்த விவகாரத்தில் ஸ்டாலின் என்ன முடிவு எடுக்கப்போகிறார் என்பது தான் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
மேலும் செய்திகள்
can-nirmala-sitharaman-be-mocked-turbulent-weather-in-coimbatore
தயாநிதி மாறனின் பிராமணர்கள் மொழி.. நிர்மலா சீதாராமனை கேலி செய்யலாமா? கோவையில் கொந்தளித்த வானதி
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
m-k-stalin-his-first-action
திமுகவிற்கு குடைச்சல் கொடுத்தவர்களுக்கு ஸ்டாலின் “செக்”!
how-kadampur-raju-win-against-ttv-dinakaran
டிடிவி தினகரன் கடம்பூர் ராஜுவிடம் ஏன் தோற்றார்?!
traffic-ramasamy-died-due-to-illness
சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி மரணம்!
/body>