சவூதி அரசு பத்திரிக்கையாளர் ஜமால் ககோஷி கொலை செய்யப்பட்டதை ஒப்புக்கொண்டுள்ளது. இதுகுறித்து அந்நாட்டின் வழக்கறிஞர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் சவூதி அரேபியா துணை தூதகரத்தில் அவருக்கும் அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும்,அந்த வாக்குவாதத்தில் கஷோலை அதிகாரிகள் கொலை செய்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
கொலை செய்யப்பட்ட பத்திரிக்கையாளர் ககோஷிக்கியின் உடல் பாகங்கள், துருக்கிக்கான சவூதி தூதரின் வீட்டு தோட்டத்தில் இருந்து கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சவூதி அரசின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராகவும், சவூதி பட்டத்து இளவரசரைக் கடுமையாக விமர்சித்தும் எழுதி வந்த 59 வயது பத்திரிக்கையாளர் ஜமால் ககோஷிக்கி, துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்திலேயே வைத்து கொல்லப்பட்டார்.
அவர் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டதாக துருக்கி அதிபர் குற்றம்சாட்டியிருந்தார். கஸ்சோகியின் கை விரல் வெட்டப்பட்டு சவுதி பட்டத்து இளவரசருக்குப் பரிசளிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது.
ஆனால் கொல்லப்பட்ட பத்திரிகையாளர் உடல் எங்கு என்று மர்மம் நீடித்தது. இந்த நிலையில் இஸ்தான்புலில் உள்ள துருக்கிக்கான சவூதி தூதரின் வீட்டுத் தோட்டத்தில் உள்ள கிணற்றில் கஸ்சோக்கியின் உடல் பாகங்கள் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அவரது முகம் சிதைக்கப்பட்டு, உடல் பாகங்கள் துண்டு துண்டுகளாக்கி கிணற்றில் வீசப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.