பேனர் விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த தவறியதாகக் கூறி கோவை மாவட்ட ஆட்சியருக்கு எதிராக திமுக எம்.எல்.ஏ சென்னை உயர்நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார்.
கடந்தாண்டு எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவிற்காக கோவை மாநகர் முழுவதும் டிஜிட்டல் பேனர்கள் மற்றும் விளம்பர வளைவுகள் வைக்கப்பட்டது.இதில் ஒரு விளம்பர வளைவு விழுந்ததில் பொறியளார் ரகுபதி என்பவர் மரணமடைந்தார். இது தொடர்பாக சிங்காநல்லூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ. கார்த்திக் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சாலைகளின் குறுக்கே மற்றும் நடைபாதைகளை ஆக்கிரமித்து பேனர்கள் வைக்க கூடாது உட்பட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவை முறையாக அமல்படுத்த தவறியதாக கோவை மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட 9 பேர் மீது கார்த்திக் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார்
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுப்பையா, சுந்தர் அடங்கிய அமர்வு, தலைமை செயலாளர் மற்றும் கோவை மாவட்ட ஆட்சியர் ஆகியோர் 2 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டடார்.