தமிழக அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் மாதம் 6ம் தேதி கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் தீபாவளி முன்னிட்டு தமிழக அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில், தமிழக அரசுத் துறை மற்றும் பொதுத்துறை மற்றும் அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் அமைப்புகளுக்கான போனஸ் அறிவிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அந்த நிறுவனங்களின் ஒதுக்கக்கூடிய உபரி தொகையை கணக்கில் கொண்டு 8.33 சதவீத போனஸ் மற்றும் 11.67 சதவீத கருணைத் தொகை என மொத்தம் 20 சதவீதம் வரை போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
மேலும், அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதில், 8.33 சதவீத போனஸ், 11.67 சதவீத கருணைத் தொகை என மொத்தம் 20 சதவீதம் போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும் என அறவிக்கப்பட்டுள்ளது.