இலங்கை நாடாளுமன்ற கூட்டத்தை முடித்து வைத்த அதிபர் மைத்ரி பால சிறிசேன, 3-வது கூட்டத்தொடர் நவம்பர் 16ஆம் தேதி தொடங்கும் என அறிவித்துள்ளார்.
இலங்கையில் நடைபெற்ற பொதுத் தேர்தலுக்குப் பிறகு சிறி சேனாவின் இலங்கை சுதந்திரா கட்சியும், ரனில் விக்ரமசிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சியும் இணைந்து ஆட்சி அமைத்தது. அதன்படி, மைத்திரிபால சிறிசேனா அதிபராக பதவி ஏற்றார். ரணில் விக்ரமசிங்கே பிரதமாக பதவி ஏற்றார்.
இதனிடையே, பிப்ரவரி மாதம் நடந்த உள்ளாட்சி தேர்தலில் முன்னாள் அதிபர் ராஜபக்சே தலைமையிலான இலங்கை மக்கள் முன்னணி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. இது ஆளும் கூட்டணிக்கு பெரும் பின்னடைவாக உணரப்பட்டது. உள்ளாட்சி தேர்தல் மூலம் ராஜபக்சே இலங்கை அரசியலில் மீண்டும் செல்வாக்கு பெற்றார்.
இலங்கை அரசியலில் அதிரடி திருப்பம் ஏற்பட்டது. மைத்ரி பால சிறிசேன கட்சி ஆட்சியில் இருந்து நேற்று திடீரென விலகியது. அத்துடன் ரனில் விக்ரமசிங்கேவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கினார் சிறிசேனா. சிறிது நேரத்தில், ராஜபக்சேவும் சிறிசேனாவும் கூட்டணி அமைத்ததோடு, இரவிலேயே இலங்கை பிரதமராக ராஜபக்சே பதவியேற்றார்.
இதனிடையே, சிறிசேன தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிக்கக் கோரி ரனில்விக்ரசிங்கே வலியுறுத்தினார். இத்தகைய பரப்பான சூழலில், நாடாளுமன்ற அமர்வை முடித்து வைப்பதாக அதிபர் மைத்ரி பால சிறிசேன அறிவித்துள்ளார். 3-வது கூட்டத்தொடர் நவம்பர் 16ஆம் தேதி தொடங்கும் எனவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்