விரைவில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து தேர்தல் அறிவிப்பு வந்த பிறகு முடிவெடுக்கப்படும் என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் இன்று முத்துராமலிக தேவரின் 111வது ஜெயந்தி விழா மற்றும் 56வது குருபூஜை விழா கொண்டாடப்பட்டது.
இதனால், தேவர் சிலைக்கு அரசியல் தலைவர்கள் பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அந்த வகையில், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் சென்னையில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போதுஅவர் பேசியதாவது: 2021ம் ஆண்டில் தேர்தல் நடைபெறும் பட்சத்தில், உள்ளாட்சி தேர்தல், நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு மக்கள் இடையே தங்களுக்கு என செல்வாக்கு இருக்கு என்பதை தெரிந்து கொள்ளும் அவசியம் சமத்துவ மக்கள் கட்சியின் நிலைபாடு.
யாரையும், யாரும் இயக்க முடியாது, அவர் அவர்களுக்கு அறிவு, ஆற்றல், திறமை இருக்கும்போது அதுதான் வெளிப்படும், மற்றவர்கள் இயக்குகிறார் என்றால் அதற்கு கருத்து தெரிவிக்க முடியாது என்றார்.