சென்னையில் செல்போன் பேசியபடி பேருந்துகளை இயக்கிய 50 ஓட்டுனர்களை சஸ்பெண்ட் செய்து அரசு மாநகர உயரதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அரசு மாநகர பேருந்துகளை இயக்கி வரும் ஓட்டுனர்கள் செல்போன் பேசியபடி இயக்குவதால் விபத்துகள் அதிகளவில் நிகழ்கிறது. இதனால், பயணிகள் அச்சத்துடனையே பேருந்துகளில் பயணிக்கும் நிலை ஏற்படுகிறது. இதுதொடர்பாக, பயணிகளும் சென்னை மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு புகார்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்த புகார்களை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட அதிகாரிகள், அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில், செல்போன் பேசியபடி பேருந்துகளை இயக்கிய சுமார் 50 ஓட்டுனர்களை இடைக்கால பணிநீக்கம் செய்து அதிகாரிகள் அதிடிர நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
மக்களின் உயிரில் பொறுப்பின்றி நடந்துக் கொள்ளும், பேருந்து ஓட்டுனர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.