வைகாசி விசாகம்: வடபழனி கோவிலில் கோலாகல விழா ஏற்பாடுகள் மும்முரம்

May 15, 2018, 18:32 PM IST
முருகனுக்கு உகந்த விழாக்களில் முக்கியமானது வைகாசி விசாகம். உலகம் முழுவதும் உள்ள அணைத்து முருகன் திருக்கோவில்களிலும் இவ்விழா கோலாகலமாக கொண்டாட ஏற்பாடுகள் தயாராகி வருகின்றன. 
சென்னையின் முக்கிய திருகோவிலான வடபழனி கோவிலில் வைகாசி விசாகம் சிறப்பாக கொண்டாடபடவுள்ளது. 21 நாட்கள் நடைபெற இருக்கும் இவ்விழாவின் முதல் நாளான மே 18ந் தேதி மாலை 5 மணியளவில் விநாயகர் புறப்பாடு நிகழ்ச்சியுடன் துவங்கப்பட இருக்கிறது. 19ந் தேதி சனிக்கிழமை 2ம் நாள் காலை 7 மணியளவில் கொடியேற்றம் நடைபெறவுள்ளது. 23ம் தேதி இரவு பஞ்சமூர்த்தி புறப்பாடும், 25ந் தேதி காலை 7 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. 27ம் தேதி ஞாயிறு இரவு வடபழனி முருகன் உற்சவர் புறப்பாடு நடைபெறுகிறது.
வைகாசி விசாகத்தில் முக்கிய நிகழ்ச்சியான 28ந் தேதி காலை 8 மணிக்கு வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சண்முகர் வீதி உலாவும் 12 மணியளவில் தீர்த்தவரியும் மாலை 6மணிக்கு திருக்கல்யாண உற்சவமும்,இரவு 7 மணிக்கு மயில் வாகனத்தில் புறப்பாடு நடைபெறுகிறது. புஷ்பபல்லக்கு புறப்பாடு 29ந் தேதி இரவு 7மணிக்கு நடைபெறும்.
30ந் தேதி முதல் ஜூன் 8ம் தேதி வரை தினமும் இரவு 7 மணிக்கு கலை நிகழ்ச்சிகள், இன்னிசை கச்சேரி, பரதநாட்டியம், சமய சொற்பொழிவு, நாட்டுப்புற பாடல்கள், பொம்மலாட்டம் போன்ற காலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை  திருக்கோவில் நிர்வாகிகள் இணை ஆணையர் வான்மதி தலைமையில் செய்து வருகின்றனர்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading வைகாசி விசாகம்: வடபழனி கோவிலில் கோலாகல விழா ஏற்பாடுகள் மும்முரம் Originally posted on The Subeditor Tamil

More Spirituality News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை