முடிவுக்கு முன்னரே குமுறிய `மூவேந்தர்கள்… உல்டாவான கர்நாடக தேர்தல் கணிப்பு!

by Rahini A, May 15, 2018, 18:02 PM IST
கர்நாடக தேர்தல் முடிவுகள் யாரும் எதிர்பாராத விதமாக மாறியுள்ள நிலையில், தமிழகத்தின் முக்கிய மூன்று அரசியல் புள்ளிகளின் கருத்து கவனம் பெற்றுள்ளது.
கடந்த 12-ம் தேதி கர்நாடக மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. காங்கிரஸ் மற்றும் பாஜக-வுக்கு இடையில் நேரடி போட்டி இருந்தாலும், மதச்சார்பற்ற ஜனதாதள கட்சிக்கும் குறிப்பிடத்தக்க செல்வாக்கு இருந்தது.
இதனால், மும்முனை போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 222 தொகுதிகளுக்கும் முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டன. பாஜக 106 தொகுதிகளிலும், காங்கிரஸ் 77 தொகுதிகளிலும், மஜத 37 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
எந்தவொரு கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், காங்கிரஸ்-மஜத கூட்டணி வைத்துள்ளன. இதையடுத்து, மஜக-வின் குமாரசாமி முதல்வராக பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மதியம் 1 மணிக்கு, பாஜக தனிப் பெரும்பான்மை பெரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அதிகாரபூர்வ முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. அதற்கு முன்னரே தமிழ எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், `கர்நாடக தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் திரு. எடியூரப்பா அவர்களுக்கு வாழ்த்துகள். புதிதாக பொறுப்பேற்கும் பா.ஜ.க அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, தமிழக காவிரி உரிமையை மீறாமல் விரைவில் தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை திறக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்’ என்று ட்விட்டரில் பதிவிட்டார்.
அதைப் போலவே, முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் தங்கள் பங்குக்கு பாஜக-வையும் அமித்ஷாவையும் புகழ்ந்து தள்ளி ட்வீட்டினர். ஆனால், முடிவு தலைகீழாக மாறியதால், மூவரும் தற்போது மீம் கன்டன்டாக மாறியுள்ளனர்.
எடப்பாடி பழனிசாமிக்கும், பன்னீர்செல்வத்துக்கும் முட்டுக் கொடுக்க வேண்டிய அவசியம் புரிகிறது. ஆனால், திமுக-வின் செயல் தலைவருக்கு எதற்கு இந்த அவசரம் என்பது விளங்கவில்லை.
 
 
 

You'r reading முடிவுக்கு முன்னரே குமுறிய `மூவேந்தர்கள்… உல்டாவான கர்நாடக தேர்தல் கணிப்பு! Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை