’கர்நாடகா தேர்தலில் பாஜக-வை ஒழித்துக்கட்டினால் போதும் முதல்வர் பதவி எல்லாம் வேண்டாம்’ என நேரடியாகக் களம் இறங்கியுள்ளார் ராகுல்.
கடந்த 12-ம் தேதி நடைபெற்ற கர்நாடகா தேர்தலில் வாக்கு முடிவுகள் இன்னும் சற்று நேரத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளன. மொத்தம் உள்ள 222 தொகுதிகளில் பாஜக 106 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் 75 தொகுதிகளிலும், மஜக 39 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது.
கர்நாடகாவில் ஆட்சி அமைக்க மொத்தம் 112 தொகுதிகள் தேவைப்படுகிறது. இதனால், மஜக-வை விட அதிக தொகுதிகளில் காங்கிரஸ் வென்றிருந்தாலும் பா.ஜ.க-வை ஒழிப்பதுதான் முதல் கடமை என காங்கிரஸ் களம் இறங்கியுள்ளது.
இதனால், முதலமைச்சர் பதவியே வேண்டாம் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் இருந்து நேரடி உத்தரவு கர்நாடகா காங்கிரஸாருக்கு வந்துள்ளது. இதன் அடிப்படையில் கட்சியின் தலைமை முடிவை ஏற்ற சித்தராமையா, ‘கர்நாடகாவின் முதல்வராக மஜக பதவி ஏற்கும்’ என அறிவித்துள்ளார்.
மேலும் சித்தராமையா- குமாரசாமி கூட்டணி இன்று மாலை ஆளுநரிடம் ஆட்சி அமைப்பதற்கான உரிமை வேண்டும் கடிதத்தை அளிக்கத் தயாராக உள்ளனர்.