தயாரிப்பாளராக சிவகார்த்திகேயன்… மோஷன் போஸ்டர் வெளியீடு!

by Rahini A, May 15, 2018, 18:47 PM IST

நடிகர் சிவகார்த்திகேயன் முதன்முறையாக தான் தயாரித்துள்ள திரைப்படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.

நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, தன் திறமையாலும் அயராத உழைப்பாலும் தமிழ் திரையுலகின் உச்சத்தைத் தொட்டுள்ளார் சிவகார்த்திகேயன். அடுத்தடுத்து வெற்றிப் படங்களை கொடுத்திருந்த சிவா, தற்போது தயாரிப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார்.

இது குறித்து சில நாட்களுக்கு முன்னர் கூறிய சிவா, தற்போது அந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர்களை தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடித்திருக்கும் `கனா’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில், சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார். அருண்ராஜா காமராஜ் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாக உள்ளார்.

மிகுந்த எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள இந்தப் படம், ஒரு ஸ்போர்ட்ஸ் டிராமாவாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், ஐஸ்வர்யா இதில் இந்திய கிரிக்கெட் வீராங்கனையாக தோன்றுவார் என்று தெரிகிறது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

 

You'r reading தயாரிப்பாளராக சிவகார்த்திகேயன்… மோஷன் போஸ்டர் வெளியீடு! Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை