திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவத்தையொட்டி, மலையப்ப சுவாமி கற்பக விருட்ச வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
3 ஆண்டுகளுக்கு பிறகு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவம் கொண்டாடப்படுகிறது.
விழாவின் 4ஆம் நாளான இன்று, மலையப்ப சுவாமி கிருஷ்ணர் சுவாமி அலங்காரத்தில், ருக்மணி, சத்யபாமா தாயார்களுடன் கற்பக விருட்ச வாகனத்தில் எழுந்தருளி, மாட வீதிகளில் வலம் வந்தார்.
மாடவீதியின் இருமருங்கிலும் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், ஏழுகுண்டலவாடா...கோவிந்தா கோவிந்தா என கோஷம் எழுப்பி மலையப்ப சுவாமியை தரிசனம் செய்தனர்.
வீதி உலாவில், யானைகள் அணிவகுத்து சென்றன. பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த பக்தர்கள் சுவாமி வேடமணிந்தும், கோலாட்டம் ஆடியபடியும், பஜனை பாடல்கள் பாடியும் வந்தனர்.
மேலும், வீதி உலாவில் பெரிய மற்றும் சின்ன ஜீயர் தலைமையில் சீடர்கள் நாலாயிர திவ்ய பிரபந்தம் பாடியபடி சென்றனர்.