அதிமுகவில் விருப்ப மனு ரொம்ப குறைவு: 2014-ல் 4500 பேர் மனு - தற்போது 1737 பேர் மட்டுமே விருப்பம்!

மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோரிடம் விருப்பமனு வாங்குவது இன்றுடன் நிறைவடைந்தது. மிக மிகக் குறைவாக மொத்தம் 1737 பேர் மட்டுமே விருப்ப மனு கொடுத்துள்ளனர்.

அதிமுகவில் விருப்ப மனு கடந்த 4-ந் தேதி முதல் வழங்கப்பட்டு வந்தது. 10-ந்தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்ட நிலையில், விருப்ப மனு எண்ணிக்கை குறைவாக இருந்ததால் மேலும் 4 நாட்கள் நீடிக்கப்பட்டு இன்று மாலை நிறைவடைந்தது.மொத்தம் 1737 பேர் மட்டுமே விருப்ப மனு கொடுத்துள்ளனர்.

ஜெயலலிதா இருந்த போது 2014-ல் போட்டி போட்டு 4500-க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு செய்த நிலையில் தற்போது அதில் பாதியளவுக்குக் கூட விருப்ப மனு வழங்காதது அதிமுக நிர்வாகிகளை அதிர்வடையச் செய்துள்ளது.

Get our website tamil news update in your mail inbox: Subscribe to The Subeditor - Tamil news website | RSS by Email

மேலும் செய்திகள்