தேமுதிக பொதுச்செயலர் விஜயகாந்தை தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் திடீரென சந்தித்து பேசியதே தினகரனுக்காகத்தானாம்.
தினகரன் தலைமையில் மெகா கூட்டணி அமைத்து நல்ல ‘அறுவடை’ செய்துவிடலாம் என கணக்குப் போட்டிருந்தார் திருநாவுக்கரசர். ஆனால் அவருக்கு டெல்லி மேலிடம் க்ரீன் சிக்னல் கொடுக்கவில்லை.
அத்துடன் திருநாவுக்கரசர் பதவிக்கும் திமுக வேட்டு வைத்துவிட்டது. இதனால் செம கடுப்பில் இருந்து வருகிறாராம் திருநாவுக்கரசர்.
இந்நிலையில் அதிமுக-பாஜக கூட்டணியில் பேரம் படியாமல் தேமுதிக இழுத்துக் கொண்டிருக்கிறது. இதனால் தேமுதிக எங்கே திமுக பக்கம் போய்விடுமோ என பதறிப் போன திருநாவுக்கரசர் தினகரன் கட்சியுடன் கூட்டணி அமையுங்க... நிறைய தொகுதியும் பணமும் கிடைக்கும் என அட்வைஸ் செய்திருக்கிறாராம்.
முதலில் தினகரன் கட்சியுடன் கூட்டணி அமைக்கத்தான் தேமுதிக விருப்பம் தெரிவித்தது. பின்னர் தினகரனிடம் இருந்து பணத்தை வாங்க முடியாது என்பதால் அதிமுக பக்கம் தேமுதிக தாவியது.
அங்கே பாமகவை விட கூடுதல் தொகுதி கேட்கப் போய் சிக்கலானது என்பது குறிப்பிடத்தக்கது.