ஆரணியில் அதிமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் பாமக, தேமுதிகவினர் பங்கேற்காமல் புறக்கணித்தது முதல் நாளிலேயே கூட்டணியில் சலசப்பை ஒற்படுத்தியுள்ளது.
ஆரணி மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணியில் தற்போதைய அதிமுக எம்.பி. செஞ்சி சேவல் ஏழுமலை மீண்டும் போட்டியிடுகிறார்.நேற்று முதலாவதாக அதிமுக கூட்டணி சார்பில் ஆரணியில் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக வேட்பாளர் ஏழுமலையுடன் பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ், புதிய நீதிக் கட்சி நிர்வாகிகள் மட்டும் மேடையேறினர். ஆனால் பாமக, தேமுதிக தரப்பில் ஒருவர் கூட பங்கேற்கவில்லை. அதிமுக தரப்பில் தங்களை முறையாக அழைப்பு விடுக்காததால் கூட்டத்தை புறக்கணித்ததாக பாமக, தேமுதிக தரப்பில் தெரிவிக்கப்பட்டது .
ஆனால் ஆரணி தொகுதியைக் கேட்டு பாமகவும், தேமுதிகவும் கடைசி வரை பிடிவாதம் செய்ததாகவும் இரு கட்சிகளில் ஏதேனும் ஒரு கட்சிக்கு கொடுத்தாலும் வம்பு தான் என்று அதிமுக வே இந்தத் தொகுதியை தக்க வைத்தது என்று கூறப்படுகிறது. ஆரணி தொகுதி ஒதுக்காத காரணத்தால் தான் இப்போதே பாமகவும், தேமுதிகவும் ஒத்துழையாமையை தொடங்கியுள்ளது கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.