முதல்கட்ட வாக்குப் பதிவுக்கான வேட்பு மனுதாக்கல் இன்றுடன் முடிவு ....

To finish the nomination for the first ballot registration

by Gokulakannan.D, Mar 25, 2019, 08:49 AM IST

நாடாளுமன்ற தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப் பதிவுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது .

நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 11 ஆம் தேதி முதல் மே 19ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறவிருக்கிறது . அனைத்து கட்சிகளும் தங்களுக்கான வேட்பாளர்களை தேர்ந்தெடுத்து , முதல் கட்ட தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கலை செய்து வருகின்றனர் . இந்நிலையில் முதல் கட்ட தேர்தலுக்கான 91 தொகுதிகளுக்கான வேட்பு மனு தாக்கல் இன்றுடன் நிறைவு பெருகிறது . தமிழகம் மற்றும் ‌புதுவை உள்ளிட்ட 97 தொகுதிகளுக்கு நடைபெறும் 2-ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் நாளையுடன் நிறைவடைகிறது.

தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கு இதுவரை 254 மனுக்கள் தாக்கல் செய்யப்ட்டுள்ளன . நாளையுடன் 2-ம் கட்ட தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் முடிவடைவதால் தமிழகத்தில் உள்ள கட்சிகளான அதிமுக , திமுக, பாஜக ,அமமுக மற்றும் மக்கள் நீதி மய்யம் போன்ற கட்சிகள் இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்வார்கள் எனத் தெரிகிறது.

 

மக்களவைத் தேர்தலுடன் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வேட்பு மனுத் தாக்கலும் நாளை முடிவடைகிறது. இவ்விரு தேர்தல்களுக்கான வேட்பு மனுக்கள் புதன் கிழமை பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்படும் .


இறுதி வேட்பாளர் பட்டியல் வெள்ளி கிழமை வெளியிடப்படும் .

You'r reading முதல்கட்ட வாக்குப் பதிவுக்கான வேட்பு மனுதாக்கல் இன்றுடன் முடிவு .... Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை