தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் சின்னத்தை நிரந்தரமாக ஒதுக்க உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர், நீதிமன்றத்தில் ஜி.கே.வாசன் முறையீடு செய்துள்ளார்.
அதிமுக கூட்டணியில் ஜி.கே.வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒரே ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்படி தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் தமாகா வேட்பாளருக்கு இந்தத் தேர்தலுக்கு மட்டும் என்ற நிபந்தனையுடன் சைக்கிள் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.
இந்நிலையில் நிரந்தரமாக சைக்கிள் சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி ஜி.கே.வாசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு செய்தார். இதனை விசாரித்த நீதிபதி மணிக்குமார், முறைப்படி மனுவை வழக்காக தாக்கல் செய்தால் நாளையே விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக அறிவித்தார்.