மக்களைவைத் தேர்தலுக்கான நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் பட்டியலில் 20 பெண்கள் கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிடுவார்கள் எனக் கட்சியின் தலைவர் சீமான் அறிவித்தார்
நாம் தமிழர் கட்சி சார்பாக 40 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் எனவும் , ஆரம்பம் முதலே பாதிக்கு பாதி பெண்கள் நிறுத்தப்படுவார்கள் எனவும் சீமான் கூறி வந்தார் . தமிழகத்தில் நாளையுடன் வேட்பு மனுத்தாக்கல் முடிவடைவதைத் தொடர்ந்து அனைத்து கட்சிகளும் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்து வருகின்றனர் .
இந்நிலையில் இன்று 20 தொகுதிகளில் பெண் வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என்றும் அவர்களின் பெயர்களையும் சீமான் வெளியிட்டார் .
20 தொகுதிகளுக்கான பெண் வேட்பாளர் பட்டியல்
1. வேலூர் - தீபலட்சுமி
2. பெரம்பலூர் - க. சாந்தி
3. வடசென்னை - பி. காளியம்மாள்
4. பொள்ளாச்சி - அ. சனுஜா
5. இராமநாதபுரம் - தி. புவனேஸ்வரி
6. கடலூர் - சா. சித்ரா
7. திருநெல்வேலி - பா. சத்யா
8. தருமபுரி - ர. ருக்மணிதேவி
9. திருவள்ளூர் (தனி) - ம. வெற்றிச்செல்வி
10. விழுப்புரம் (தனி) - பிரகலதா
11. நாகப்பட்டினம் (தனி) - பொ. மாலதி
12. மயிலாடுதுறை - கு. சுபாஷினி
13. நீலகிரி (தனி) - சே.மணிமேகலை
14. ஈரோடு - மா.கி.சீதாலட்சுமி
15. காஞ்சிபுரம் (தனி) - த.ரஞ்சனி
16. தென்சென்னை - அ.ஜெ. ஷெரின்
17. மதுரை - க. பாண்டியம்மாள்
18. சிவகங்கை - வே. சக்திப்பிரியா
19. ஆரணி - அ.தமிழரசி
20. புதுச்சேரி - நி. ஷர்மிலாபேகம்
அதிமுக ,திமுக,பாஜக உள்ளிட்ட கட்சிகளில் பெண்களுக்கு மிக குறைவான தொகுதிகளே ஒதுக்கப்பட்ட நிலையில் நாம் தமிழர் கட்சி பெண்களுக்கு ஏற்கனவே கூறி வந்த நிலையில் 20 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது .இதன் மூலம் பெண்களுக்கு 50 சதவீதம் சம உரிமை அளித்துள்ளது . மேலும் இந்த பட்டியலில் உள்ள பெண்கள் அனைவரும் நன்கு படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது . நாம் தமிழர் கட்சியினர், 'சொல் ஒன்று செயல் ஒன்று 'என்றில்லாமல் சொன்னதை செய்து அனைத்து தரப்பினரிடமும் வெகுவான பாராட்டுகளைப் பெற்றுள்ளனர்.